வீட்டில் அம்மா கையில் சமைத்து சாப்பிடும் சுவையும் ருசியும் தனி தான். எல்லாரது மனதுக்கும் பிடித்தபடி அம்மா செய்யும் ஒவ்வொரு உணவும் மிகச் சிறப்பானவை. அந்த உணவுகளை சமைத்து விற்றால் எப்படி இருக்கும் என்று நிச்சயம் நாம் பேசியிருப்போம்.
நிச்சயமாக அந்த உணவு ஸ்டார் ஹோட்டல் உணவுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும். உங்களால் ஒரு உணவகத்தை தொடங்க முடியாவிட்டால் பரவாயில்லை. வீட்டில் இருந்தபடியே சமைத்து ஆன்லைன் வாயிலாக விற்கலாம். இதுதான் கிளவுட் கிச்சனின் அடிப்படை கான்செப்ட். இது தனிநபர், நிறுவனத்திற்கென மாறும்.

வழக்கமான ரெஸ்டாரன்ட்கள் போல் அல்லாமல் நமது வீட்டிலேயே சமைத்து விற்கலாம். இங்கு வந்து சாப்பிட முடியாவிட்டாலும் ஆன்லைனில் உணவு ஆர்டர்களைப் பெறலாம். நீங்கள் ஒரு கிளவுட் கிச்சனை தொடங்க நினைத்தால் எங்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். கிளவுட் கிச்சன் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் இருவரின் ஆலோசனைகளைப் பார்க்கலாம்.
1. உங்கள் மீதுநம்பிக்கை வையுங்கள் : நம்பிக்கையை உங்களது தொழிலுக்கு அடித்தளமாகும். 2020இல் கொரானோ பெருந்தொற்று ஏற்பட்டபோது கேரளத்தை சேர்ந்த சக்தி, ராஜி போன்ற பலரும் தங்களது நம்பிக்கையை விடவில்லை.
தனது கணவர் மற்றும் குழந்தைகளின் பெரும் ஆதரவுடன் கிளவுட் கிச்சனை ராஜி ஆரம்பித்தார்.
ப்ரம் தி கிச்சன்- ஹோம்லி ஃபுட்ஸ் என்ற பெயரில் தொழிலைத் தொடங்கினார். இப்போது அவருக்கு வாரத்துக்கு 100 ஆர்டர்களுக்கு மேல் குவிகிறது.
2. சிறிய முதலீட்டில் தொடங்குங்கள்: தொடக்கத்தில் ராஜி தனது கிளவுட் கிச்சனுக்கு மிகச் சிறிய அளவில்தான் முதலீடு செய்தார். எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட ராஜி, எப்போதும் இரண்டு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கிளவுட் கிச்சன் சிறிய அளவில் வீட்டில் செய்யும் தொழிலாகும். இதனால் இது வெற்றி பெற சிறிது காலம் பிடிக்கும். ஓரிரு மாதங்களுக்குள் லாபத்தைப் பார்தது விடலாம் என்று நினைக்கக் கூடாது என்கிறார்.
3. உங்கள் மார்க்கெட் மற்றும் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்: மார்க்கெட் ரிசர்ச் செய்யுங்கள். போட்டியாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உணவு பற்றிய கருத்துகளை வாடிக்கையாளர்களிடம் பெற்று அதற்கேற்ப உணவை மேலும் சிறப்பாகச் செய்யுங்கள்.
உணவின் விலையை நிர்ணயிக்கும்போது மூலப்பொருட்கள் விலை, கூலி, இதர செலவுகள், மார்க்கெட் டிமாண்ட், எதிர்பார்க்கும் விலை ஆகியவற்றை கணிக்க வேண்டும்.
கட்டுபடியாவதற்கும் லாபத்துககும் இடையில் பேலன்ஸ் செய்ய வேண்டும். அத்துடன் உங்களது உணவுகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கிளவுட் கிச்சனை தொடங்கும்போது சிறிய அளவில் முதலீடு செய்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்று ராஜி கூறுகிறார்.
4. உணவில் புதுமை வேண்டும்: ஹைதராபாத்தை சேர்ந்த நாஸ் அஞ்சும் என்பவர் அஞ்சும்ஸ் கிச்சன் என்ற கிளவுட் கிச்சனைத் தொடங்கியுள்ளார். அவரது மெனுவில் உள்ள உணவு வகைகள் அவருக்கு பெருத்த வியாபாரத்தைக் கொண்டு வருகிறது.
அஞ்சும் செய்யும் ஹோம்லி பிரியாணியின் சுவை வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இருப்பினும் மக்கள் இதைக் காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கின்றனர் என்பதை அவர் புரிந்து கொண்டார். இதனால் அவர் இப்தார் பிளாட்டர் ஃபார் ஒன் என்ற ஐட்டத்தை தயாரித்தார். இதில் ஹலீம், தயிர்வடை, பழங்கள், பேரீட்சம் சேர்த்ததால் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பிடித்து விட்டது. அத்துடன் லட்டு வகைகளையும் சீசனுக்குத் தகுந்தபடி வழங்கினார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
5. புகழை பரப்ப வேண்டும்: கிளவுட் கிச்சன் சிறியஅளவில் நடைபெறும் பிசினஸ் என்பதால் அதற்காக மார்கெட்டிங்கில் நிறைய செலவு செய்ய முடியாது.
இது பற்றி ராஜி கூறுகையில் உணவு டெலிவரி ஆப்களான ஸ்விக்கி, சோமாட்டோ ஆகியவை உங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்களைத் தேடித் தரும். இருந்தாலும் நீங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் மை பிஸினஸ் போன்ற சமூக தளங்களில் உங்களது கிச்சன் பற்றி பதிவிட்டால் கூடுதலாக புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எப்போதும் உங்களது கஸ்டமர்களை உங்களது உணவு பற்றிய கருத்துகளை பகிரச் சொல்லி அதற்கேற்ப சமையலை சரி செய்யுங்கள் என்கிறார்.
6. வாடிக்கையாளர்தான் உங்ககளது மன்னன்: கிளவுட் கிச்சனில் உள்ள மிகப் பெரிய சவால் என்னவென்றால் உங்களது பிராண்டை பிரபலப்படுத்துவதுதான். வாடிக்கையாளர்களை சந்திக்காமலேயே அவர்களை கவர வேண்டியது அவசியம்.
இதற்கு ஆன்லைனில் அதிகளவு இருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் முறை ஆர்டர்களுக்கு சலுகைகள் தரலாம். குறித்த நேரத்துக்கு உணவை டெலிவரி செய்யவேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும் என்று ராஜி முத்தாய்ப்பாக கூறுகிறார்.
Story written by: Jayachandran
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications