சென்னை: அட்சய திருதியை வந்துவிட்டால் போதும், அனைத்து நகை கடைகளும் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடும். பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்வதையே பிரபலமாக விருப்பமான அனைத்து குடும்பங்களும் வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் தங்கத்திற்கே முன்னுரிமை அளிப்பார்கள்.
ஆனால் சில நேரங்களில் நகைக்கடை வியாபாரிகள் போலியான அல்லது குறைந்த தரம் கொண்ட தங்க நகைகளை மக்களிடம் ஏமாற்றி விற்று விடுகின்றனர். அதனை அறியாத சிலர் இதுபோன்ற தங்க நகைகளை வாங்கி பயன்படுத்தவும் ஆரம்பித்து விடுகின்றனர். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நகைகளை மாற்றலாம் என்று நினைக்கும் போது தான் சிக்கல் எழுகிறது.

தரம் குறைந்த தங்க நகைகள் வாங்கிய விலையை விட மிகவும் குறைந்த விலைக்கே நகை கடைகள் பெற்றுக் கொள்கின்றன. எனவே, இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நகை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வருடா வருடம் இந்த அட்சய திருதியை நாளில் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நகைகளை வாங்க கிளம்பி விடுவார்கள். ஆனால், அவ்வாறு வாங்குவதற்கு முன் தங்கத்தின் தூய்மையைப் பற்றிச் சரி பார்க்க சில வழிகள் உள்ளன.
தங்கத்தின் தூய்மை காரட் என்ற அளவில் அளவிடப்படுகிறது. 24 காரட் தங்கம் என்பது தூய்மையானது மற்றும் 99.9 சதவீத தங்கத்தை கொண்டது. ஆனால் இது மிகவும் மென்மையான ஒன்றாக இருக்கும். எனவே மற்ற உலோகங்களை கலந்து நகைகளாக உருவாக்கப்படுகின்றன.
22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீத தங்கத்தைக் கொண்டுள்ளது. இதிலும் மற்ற உலோகங்களை கலந்தே நகைகளை உருவாக்குகின்றனர். இதனை 916 ஹால்மார்க் நகைகள் என்றும் கூறுகின்றனர். தற்போது நகை கடைகளில் அதிக அளவில், இந்த 916 ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் 24 காரட் தங்கத்தை விட அதிகமாக மற்ற உலோகங்கள் கலந்து இருப்பதால், பெண்களுக்கு பிடித்த மாடல்களில் புதுப்புது நகைகளை அழகாக வடிவமைக்க முடிகிறது.
தங்கத்தின் தூய்மையை கீழ்க்காணும் மெத்தட்களைப் பயன்படுத்தி சோதனை செய்யலாம்.
வினிகர் சோதனை: நீங்கள் வாங்கிய தங்க நகைகளில் இரண்டு துளிகள் வினிகரை சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் காத்திருங்கள். அவற்றின் நிறம் மாறினால் அது தூய்மையற்ற தங்கம். மாறாமல் இருந்தால் அது தூய்மையான தங்கம்.
அமில சோதனை: தங்கத்தின் தூய்மையை அறிய இது ஒரு நம்பகமான வழியாக உள்ளது ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் மற்றும் ஒரு கல் ஆகியவை இதற்கு தேவை. கல்லில் தங்கத்தை சிறிது தேய்த்து, அதில் அமிலத்தை சேர்க்கவும். தங்கத்தை தவிர வேறு ஏதேனும் உலகம் கலந்திருந்தால் அமிலத்தில் அது கரைந்து விடும். இதனை வைத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த சோதனையை நீங்கள் வீட்டில் செய்ய முடியாது. அருகில் உள்ள நகை கடைகளில் செய்து பார்க்கலாம்.
தண்ணீர் சோதனை: தங்கத்தில் உள்ள Atoms என்று சொல்லப்படுகிற அணுக்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டு இருப்பதால் அது தண்ணீரில் மிதக்காது. இதில் வேறு ஏதேனும் உலோகம் அதிக அளவில் கலந்திருந்தால், தங்கம் தண்ணீரில் மிதக்க ஆரம்பிக்கும்.
காந்த சோதனை: பொதுவாகவே அனைத்து உலோகங்களும் காந்தத்தின் அருகில் வைக்கும் போது ஈர்க்கப்படும். ஆனால் தங்கம் அதற்கு எதிர் மாறாக காந்தத்தில் ஈர்க்கப்படாது. எனவே ஒரு துண்டு காந்தத்தை, நீங்கள் வாங்கிய தங்க நகைகளின் அருகில் வைத்தால், அவை ஒட்டாமல் இருக்க வேண்டும். மாறி ஒட்டிக்கொண்டால் அவை தூய்மையற்ற தங்கம். தங்கத்தின் தூய்மையை அறிய இது ஒரு எளிய வழியாக உள்ளது.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications