இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் கார்டு, இந்திய குடிமக்களுக்கு ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டில் ஒருவரின் பயோமெட்ரிக் மற்றும் முகவரி விவரங்கள் இரண்டும் இருக்கும். இது பல்வேறு அரசு திட்டங்களுக்கும் அத்தியாவசிய அடையாளச் சான்றாக செயல்படுகிறது. எனவே, ஆதார் கார்டில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற அச்சிடப்பட்ட தகவல்களில் எந்தப் பிழையும் இல்லாமல் வைத்திருப்பது அவசியம். உங்கள் ஆதார் அட்டையில் தவறான பிறந்த தேதி இருந்தால் அதை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பார்ப்போம்.
உங்கள் ஆதாரில் தவறான பிறந்த தேதியை சரிசெய்வதற்கான ஸ்டெப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப் 1: ஆதாரில் தவறான பிறந்த தேதியை சரிசெய்வதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிடவும். உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டையில் பிறந்த தேதி தவறாக இருந்தால், ஆதார் பதிவு மையத்திலிருந்து திருத்தப் படிவத்தைப் பெறவும்.
ஸ்டெப் 2: திருத்தப் படிவத்தில், உங்களின் 12 இலக்க ஆதார் நம்பர், முழுப்பெயர் மற்றும் தேவையான பிற விவரங்களை பூர்த்தி செய்யவும். நீங்கள் பிறந்த தேதியை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாகக் குறிப்பிடவும்.
பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் போன்ற உங்களின் சரியான பிறந்த தேதியைக் துல்லியமாகக் காட்டும் ஆவணத்தின் ஜெராக்ஸ் காபியை திருத்தப் படிவத்துடன் இணைக்கவும்.
ஸ்டெப் 3: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஆதார் பதிவு மையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும். அதிகாரி உங்கள் பயோமெட்ரிக்ஸை சரிபார்ப்பார்.
படிவம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணம் ஆகியவை சரியாக உள்ளதா என்று சரிபார்க்கப்படும். அனைத்தும் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் பிறந்த தேதி புதுப்பிக்கப்படும் (அப்டேட்).
ஸ்டெப் 4: உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதியைப் புதுப்பிக்க ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில நாட்களுக்குள், உங்கள் திருத்தப்பட்ட பிறந்த தேதி ஆதார் அமைப்பில் புதுப்பிக்கப்படும்.
ஸ்டெப் 5: 90 நாட்களுக்குள், உங்கள் DOB ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும்.
இந்தப் ஸ்டெப்-களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆதார் அட்டையில் சரியான பிறந்த தேதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். முன்னதாக ஆதார் அட்டையில் பிறந்த தேதியைப் புதுப்பிக்கும் செயல்முறையானது myAadhaar இணையதளம் மூலமாகவும், பதிவுசெய்யப்பட்ட ஆதார் பதிவு மையங்கள் மூலமாகவும் ஆஃப்லைனிலும் செய்யப்பட்டது.
ஆனால் இப்போது, ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மட்டுமே ஆன்லைனில் புதுப்பிக்க முடியும். மீதமுள்ள அனைத்து விவரங்களும் ஆஃப்லைனில் புதுப்பிக்கப்படும். அதாவது, அதிகாரப்பூர்வ ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று மட்டுமே ஆதார் அட்டையில் உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications