சமையலுக்காக YouTube சேனல் தொடங்கிய இல்லத்தரசி.. இப்போ சொத்து மதிப்பு ரூ.29 கோடி!!

மும்பை: பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் மத்தியில் யூடியூப் என்பது பொழுதுபோக்கு சமூக ஊடகம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இன்று பலர் தங்களது வாழ்க்கையின் தொழில் தேர்வாக யூடியூப்பை தேர்வு செய்து யூடியூப்பராக மாறி லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அவர்கள் உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு, சுற்றுலா என பல்வேறு துறைகள் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

இந்த புத்தாண்டு தினத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பான உணவுகளை சமைத்து வழங்க இந்த யூடியூப்பர்களில் சிலர் நிச்சயம் உதவுவார்கள். குறிப்பாக யூடியூப்பரான நிஷா மதுலிகா கட்டாயம் உதவுவார். எளிமையான அதேசமயம் சிறந்த உணவு வகைகளை தயாரிக்க விரும்பினால் இவரது வீடியோக்களை பார்த்து நாம் அதை செய்து விடலாம். ஓய்வு எடுக்க வேண்டிய வயதில், யூடியூப்பில் தனது எளிமையான சமையல் குறிப்புகள் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் நிஷா மதுலிகா.

சமையலுக்காக YouTube சேனல் தொடங்கிய இல்லத்தரசி.. இப்போ சொத்து மதிப்பு ரூ.29 கோடி!!

1959ல் உத்தர பிரதேசத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் நிஷா மதுலிகா. பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பிறகு தொழில்நுட்ப தொழில்முனைவோரான எம்.எஸ். குப்தாவை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். நிஷா மதுலிகா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் ஆசிரியையாக பணியாற்றினார். பின்பு தனது தனது கணவரின் தொழிலில் நிதியை கையாண்டார். ஆனால் குடும்பம் டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு மாறியபோது, அவருக்கு பயணம் செய்வது மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுவது கடினமாக இருந்தது. இதனால் வீட்டிலேயே இருந்தார். இந்த சூழ்நிலையில் மகன்கள் இருவரும் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு சென்று விட்டனர். இதனால் கணவர் அலுவலகத்துக்கு சென்ற பிறகு தினமும் 6 மணி நேரம் சும்மா இருப்பதற்கு அவருக்கு பெரும் வேதனையாக இருந்தது.

இந்த ஓய்வு நேரத்தில் ஏதாவது ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய விரும்பினார். இதனையடுத்து 2007ல் நிஷா மதுலிகா வலைதளத்தில் சமையல் தொடர்பான விஷயங்களை எழுத தொடங்கினார். அப்போது அவரது வயது 54. அவரது இணையதளத்தை உருவாக்குவதில் அவரது மகன்களும், கணவரும் பெரும் உறுதுணையாக இருந்தனர். தனது அம்மாவிடம் கற்றுக் கொண்ட சமையல் குறிப்புகளை பயன்படுத்தி நிஷா புதிய உணவுகளை உருவாக்கினார். இந்த சமையல் குறிப்புகள் உலளவில் பாராட்டப்பட்டன. மேலும் அவரது ரசிகர்கள் வீடியோக்களை பதிவேற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.இதனையடுத்து 2011ல் தனது யூடியூப் சேனலை தொடங்கினார். இது அவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அது முதல் இதுவரை அவர் தனது சேனலில் 2,200 வீடியோக்களை பதிவேற்றினார்.

அவர் இணையத்தில் மிகவும் பிரபலமான சமையல்காரர்களில் ஒருவராக அறியப்பட்டார். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி உணவு வகைகளை உருவாக்கியததால் புகழ் பெற்றார். யூடியூப்பில் சிறந்த சமையல்காரர்களில் ஒருவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016ல் வோடாபோனின் உமன் ஆஃப் ப்யூர் ஒன்டர் காபி டேபிள் புத்தகத்தில் நிஷா இடம் பெற்றார். முன்பு ஓய்வு நேரத்தை வெறுத்த நிஷா மதுலிகா இன்று திரும்பி பார்க்க கூட நேரம் இல்லாமல் உள்ளார். தற்போது 64 வயதிலும் ஆர்வமாக புதுப்புது உணவு வகைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறார். யூடியூப்பில் அவரது சேனலுக்கு 1.4 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். யூடியூப் வாயிலாக மட்டும் இவருக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவருடைய சொத்து மதிப்பு ரூ.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நிஷா மதுலிகா, 5 நிபுணர்களை கொண்ட ஒரு குழுவால் இயங்கும் ஒரு இணைய பேரரசைக் கொண்டுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+