மத்திய அரசு இந்தியாவில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. வரும் செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் ஜிஎஸ்டி வரி திருத்தம் அமலுக்கு வருகிறது .
இந்தியாவில் 5 ,18, 40 என மூன்று விதமான ஜிஎஸ்டி விகிதங்கள் மட்டுமே செப்டம்பர் 22ஆம் தேதி முதல் செயல்பாட்டில் இருக்கும். 28% ஜிஎஸ்டி வரிவிகிதத்திற்குள் இருந்த பல்வேறு பொருட்களும் 5 மற்றும் 18 சதவீதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டன . அதேபோல 12 மற்றும் 18 சதவீதத்தின் கீழ் இருந்த பல்வேறு பொருட்களும் 5 என்ற விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டன. இதன் காரணமாக கார் ,இருசக்கர வாகனம், காப்பீடு ,வீட்டு உபயோகப் பொருட்கள் என பெரும்பாலானவற்றின் விலை செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்து கணிசமாக குறைகிறது.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பால் கிடைக்கக்கூடிய பலன்களை வாடிக்கையாளர்களுக்கே தருவதாக கோரி வாகனங்களின் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. இந்த நிலையில் மக்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் தங்கள் நிறுவனம் சார்பாக விற்பனை செய்யப்படும் சோப்பு ,ஷாம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கி இருக்கக்கூடிய இந்த ஜிஎஸ்டி பலன்களை வாடிக்கையாளர்களுக்கே நேரடியாக வழங்குகிறோம் என ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் கூறி இருக்கிறது. ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தங்கள் நிறுவனத்தின் விற்பனையாகாத ஸ்டாக்குகளுக்கு எம்ஆர்பி விலையை இந்த ஜிஎஸ்டி வரி திருத்தத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தங்களின் கீழ் செயல்படும் டீலர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பின்படி 125 கிராம் எடை கொண்ட லைஃப் பாய் சோப்பின் விலை 33 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக விலை குறைந்திருக்கிறது . லக்ஸ் சோப்பும் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக விலை குறைக்கப்பட்டிருக்கிறது. 180 மில்லி டவ் ஷாம்பூ 165 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக விலை குறைக்கப்பட்டு இருக்கிறது . ஹார்லிக்ஸ் ஒரு கிலோ 390 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக குறைந்திருக்கிறது.
கிஷான் ஜாம் 500 கிராம் 160 ரூபாயில் இருந்து 140 ரூபாய் என விலை குறைக்கப்பட்டுள்ளது. ப்ரூ காஃபியின் விலை 100 கிராம் 180 ரூபாயிலிருந்து 160 ரூபாய் என விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பல்வேறு பொருட்கலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் யுனிலிவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை நம் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே நமக்கு சேமிப்பை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications