இந்தியாவில் ஆன்லைன் மூலம் மோசடி செய்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. தினமும் எதாவது ஒரு பெரும் தொகை கொண்ட ஆன்லைன் மோசடி புகார் வந்துள்ளது கொண்டு இருக்கும் வேளையில் ஹைதராபாத்-தில் 700 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது மட்டும் அல்லாமல் தீவிரவாத அமைப்புடன் கூட்டணியில் இது நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது.
லெபனான்-ஐ தளமாகக் கொண்ட ஹெஸ்புல்லா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் சீனர்கள் இந்தியாவில் நடத்தப்பட்ட ரூ. 700 கோடி முதலீடு மற்றும் பகுதி நேர வேலை மோசடி ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவால் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு கிரிப்டோ ஏஜென்சியிலிருந்து பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி அளிப்பது குறித்த தகவல் வெளியானது, இந்த நிலையில் பயங்கரவாதக் குழுவின் வேலெட்-ல் சந்தேகத்திற்கிடமான பிட்காயின் வரவுகளை பிளாக் செய்யப்பட்டு உள்ளதாகவும் என்றும் ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் யுடியூப் வீடியோ லைக் செய்வது, கூகுள் ரிவ்யூவ் எழுதுவது என பல எளிய பணிகளை செய்ய வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு அதை சார்ந்த முதலீடு என பெரிய அளவிலான மோசடிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மோசடி வலையில் சிக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த சிவ குமார் என்பவர் ஏப்ரல் மாதம் ரூ.28 லட்சம் மோசடி செய்யப்பட்டு பணத்தை இழந்ததாக புகார் கொடுத்துள்ளார். இவரின் புகாரின் அடிப்படையில் புலனாய்வாளர்கள் பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பாதையைப் பின்தொடர்ந்தபோது, போலி நிறுவனங்கள் பெயரில் 48 வங்கிக் கணக்குகளுக்கு பணம் பகிரப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இப்படி 48 வங்கி கணக்கில் இருந்து சுமார் 584 கோடி ரூபாய் அளவிலான தொகையை அப்பாவி மக்களிடம் இருந்து ஏமாற்றப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதை சைபர் க்ரைம் அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். இது தொடர்பாக இந்தியா முழுவதும் இருந்து சுமார் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐதராபாத்தை சேர்ந்த முகமது முனாவர், அருள் தாஸ், ஷமீர் கான் மற்றும் ஷா சுமைர் ஆகிய நால்வர் அடங்குவர். அகமதாபாத்தைச் சேர்ந்த பிரகாஷ் முல்சந்த்பாய் பிரஜாபதி மற்றும் குமார் பிரஜாபதி மற்றும் மும்பையைச் சேர்ந்த ககன் சோனி, குட்டு என்கிற பர்வேஸ் மற்றும் நைமுதீன் ஷேக் ஆகியோரை தேடும் பணியில் உள்ளனர்.
கூடுதல் விசாரணையில் போலி கணக்கை திறந்துக்கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் வரையில் பணம் அளிக்கப்பட்டு உள்ளது என தெரிய வந்த நிலையில் அடுத்தக்கட்ட விசாரணையில் 61 வங்கி கணக்குகள், 33 போலி நிறுவனங்கள் இருப்பது தெரிய வந்தது, இதில் கூடுதலாக 128 கோடி ரூபாய் கண்டுப்பிடிக்கப்பட்டது.
சைபர் கிரைம் போலீசார் நிதி பரிமாற்றம் செய்ய ஐபி முகவரியை ஆய்வு செய்தபோது துபாய் ஐபி அட்ரெஸ் கிடைத்துள்ளது. இதைவைத்து கூடுதல் ஆய்வு செய்த போது சீன நெட்வொர்க் உடன் இணைந்து இந்திய கணக்குகள் வாயிலாக மோசடி செய்வது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ஈடுப்பட்ட சீனர்களின் பெயர் kevin Jun, Lee Lou Langzhou மற்றும் Shasha.
இதில் முக்கிய குற்றவாளியான குஜராத்-ஐ சேர்ந்த Prakash Prajapati சீன நபர்கள் உடன் நேரடிாக தொடர்பில் இருப்பதும், இந்திய கணக்கில் இருந்து சில கிரிப்டோ வேலெட்-க்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த கிரிப்டோ கணக்கு லெபனான்-ஐ தளமாகக் கொண்ட ஹெஸ்புல்லா பயங்கரவாதக் குழுவுக்கு சொந்தமானது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் உத்தர பிரதேசம், குஜராத்-ஐ சேர்ந்தவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications