நாளுக்கு நாள் புதுசு புதுசாக மோசடி யுக்திகளை பயன்படுத்தும் மோசடிக்காரர்கள் தற்போது புது வழியை கண்டுபிடித்துள்ளனர். சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக கூறி மக்களை மிரட்டி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த 31 வயதான நபர் ஒருவர் பலியாகி உள்ளார். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு கால் செய்து மிரட்டி பாதிக்கப்பட்ட நபரிடம் ரூ.11.20 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது? இதுபோன்ற சம்பவம் உங்களுக்கு நடந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த விபரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பாதிக்கப்பட்ட நபருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் மோசடிக்காரர் பாதிக்கப்பட்டவருடைய மொபைல் நம்பர் பிளாக் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் மும்பை காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்குடன் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருடைய பெயரில் ஒரு சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி பயமுறுத்தி உள்ளார்.
மோசடிக்காரர்கள் உண்மையான சம்பவம் போல காட்டிக் கொள்வதற்காக, ஸ்கைப் மூலம் தாங்கள் மும்பை போலீஸ் என்று கூறி கால் செய்துள்ளனர். அந்த அழைப்பில் பாதிக்கப்பட்டவருக்கு பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வுக்காக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறி போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நம்ப வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவரை மேலும் பயமுறுத்தும் விதமாக மோசடி செய்பவர்கள் இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால் இந்த வழக்கு உச்சநீதிமன்ற ஆய்வில் உள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர் பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
அதன் பின் மோசடிக்காரர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க இரண்டு தவணைகளாக ரூ.11.20 லட்சத்தை அனுப்பியுள்ளார். அதன்பின் மோசடி செய்பவர்கள் மேலும் செயல்முறையை முடித்துக் கொள்வதற்காக ரூ .2 லட்சத்தை கேட்டுள்ளனர். அப்போது தான் பாதிக்கப்பட்டவருக்கு இது மோசடி என்பது தெரிந்துள்ளது.
எனவே நடந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் இது குறித்த விசாரணையை தற்போது தொடங்கியுள்ளனர்.
சிம் கார்டு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?: எந்தவொரு நபரின் நம்பகத்தன்மையையும் இருமுறை சரிபார்க்கவும், குறிப்பாக அவர்கள் முக்கியமான தகவல் அல்லது அவசர அவசரமாக விவரங்களைக் கேட்டால், கண்டிப்பாக எச்சரிக்கை தேவை.
TRAI அல்லது காவல்துறை போன்ற அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் தொலைபேசியில் தனிப்பட்ட நிதித் தகவலைக் கேட்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அவசர உணர்வை உருவாக்கி, விரைவான முடிவுகளை எடுக்க உங்களை கட்டாயப்படுத்துவார்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் சிறிது நேரம் யோசித்து நம்பகமான நபர்களுடன் கலந்தாலோசிக்கவும்.
உங்கள் தனிப்பட்ட, வங்கி அல்லது பிற முக்கியத் தகவல்களை தெரியாத அழைப்பாளர்களுடன் ஒருபோதும் பகிர வேண்டாம்.
நீங்கள் மோசடி செய்யப்படுவதாக சந்தேகித்தால், உடனடியாக உங்கள் உள்ளூர் காவல்துறை அல்லது சைபர் கிரைம் பிரிவைத் தொடர்பு கொள்ளவும். சம்பவத்தை குறித்து புகாரளிப்பதன் மூலம் மற்றவர்கள் இதுபோன்ற திட்டங்களுக்கு பலியாவதைத் தடுக்கலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications