ரூ.903 கோடி மோசடி.. சீன நிறுவனங்களின் அட்டூழியம்..!

இந்தியாவில் சீன நிறுவனங்களின் நிதியியல் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் 1.5 லட்சம் ரூபாய் மோசடி வழக்கின் வாயிலாக 903 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சீன நிறுவனங்களையும், இந்த மோசடியில் நேரடியாகத் தொடர்பு கொண்ட 10 பேரையும் ஹைதராபாத் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் சிறு கடன் மற்றும் போலி முதலீடுகள் வாயிலாகப் பலர் மாட்டிக்கொண்டு பணத்தை இழந்து வரும் வேளையில் பெரும்பாலான மோசடிகளுக்குப் பின்னால் சீனர்களும், சீன நிறுவனங்களும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: சாஹில் பஜாஜ், சன்னி, வீரேந்தர் சிங், சஞ்சய் யாதவ், நவ்நீத் கவுசிக், முகமது பர்வேஸ், சையத் சுல்தான், மிர்சா நதீம் பைக், சீன நாட்டவரான லெக் எனப்படும் லி ஜாங்ஜுன் மற்றும் தைவான் நாட்டவரான சூ சுன்-யூ ஆகிய 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சீனா, தைவான்

சீனா, தைவான்

டெல்லியில் உள்ள டிடென்ஷன் சென்டரில் மையத்தில் சீன நாட்டவரான லெக் எனப்படும் லி ஜாங்ஜுன் தான் இந்த மோசடி வழக்கில் முதலில் விசாரிக்கப்பட்டார். அவரிடம் பெற்ற தகவல் படி, கம்போடியாவிலிருந்து டெல்லிக்கு வந்த தைவான் நாட்டவரான சூ சுன்-யூ கைது செய்யப்பட்டார்.

LOXAM ஆப்

LOXAM ஆப்

ஹைதராபாத் நகரின் முக்கியத் தொழிற்துறை பகுதியான தர்னாகா-வை சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு, சைபர் க்ரைம் போலிசில் LOXAM என்னும் ஆப்-ல் முதலீடு செய்தால் அதிகப்படியான வட்டி வருமானம் கிடைக்கும் எனச் சிலர் நம்பவைத்த காரணத்தால், 1.60 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் சில நாட்களில் இந்த ஆப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களைத் தொடர்புகொள்ள முடியாத போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

Xindai Technologies நிறுவனம்

Xindai Technologies நிறுவனம்

இந்த வழக்கின் விசாரணையில் அடுத்தடுத்து பல உண்மைகள் வெளியாகியுள்ளது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர் LOXAM என்னும் ஆப்-ல் முதலீடு செய்ய 1.60 லட்சம் ரூபாய் பணம் முதலில் Xindai Technologies Pvt Ltd என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் சென்றுள்ளது.

சீனர் அறிவுறுத்தல்

சீனர் அறிவுறுத்தல்

இந்த வங்கி கணக்கைத் திறந்தவர் வீரேந்தர் சிங், இவர் புனே-வில் போலீஸாரிடம் சிக்கினார், இவரிடம் விசாரணை செய்த போதி JACK என்பவரின் பெயரில் வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகவும், அதன் பின்பு வங்கிக் கணக்கு விபரங்களை JACK-கிற்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 10 பேரில் இவர் இல்லை, மேலும் இவர் சீனாவில் இருப்பதாகத் தெரிகிறது.

2 மொபைல் நம்பர்

2 மொபைல் நம்பர்

Xindai Technologies நிறுவனத்தின் பெயரில் திறக்கப்பட்ட வங்கி கணக்கில் 2 மொபைல் நம்பர் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் மற்றொரு நம்பர் Betench Network Pvt என்னும் நிறுவனத்துடையது, Betench Network வங்கி கணக்கை டெல்லியில் உள்ள சஞ்சய் குமார் திறந்துள்ளார்.

Betench Network வங்கி கணக்குகள்

Betench Network வங்கி கணக்குகள்

சஞ்சய் குமார் சீன நாட்டவரான லெக் எனப்படும் லி ஜாங்ஜுன் உடனும், மற்றும் இரு சீனர்களான Pei, Huan Zhuan ஆகிய இருவருடனும் பணியாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சஞ்சய் குமார் தைவான் நாட்டவரான சூ சுன்-யூ உடன் சேர்ந்து சுமார் 15 வங்கி கணக்குகள் திறந்துள்ளார்.

38 வங்கி கணக்குகள்

38 வங்கி கணக்குகள்

மக்களிடம் மோசடி செய்து Xindai மற்றும் Betench வங்கி கணக்கில் வந்த பணத்தைச் சுமார் 38 வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாகத் துபாய் நாட்டைச் சேர்ந்தவரான இம்ரான் என்பவர் 38 வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஹவாலா முறையில் foreign exchange மூலம் டாலராக மாற்ற உதவி செய்துள்ளார்.

ஹவாலா மோசடி

ஹவாலா மோசடி

இந்த ஹவாலா பணியில் Ranjan Money Corp மற்றும் KDS Forext Pvt Ltd ஆகிய இரு நாணய பரிமாற்ற நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளது. டாலராக மாற்றிய பணத்தைச் சாஹல் மற்றும் சன்னி ஆகியோர் பெற்று வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+