பிசி நேரத்தில் சுட சுட இட்லி, சாம்பார், சட்னி கொடுத்தால் அமிர்தமாக இருக்கும், இதுவே அசைவ பிரியர்களுக்கு இட்லி உடன் மட்டன் அல்லது மீன் குழம்பு, அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம்..
இன்று உலக இட்லி தினம் என்பதால் காலை முதல் சமுகவலைத்தளத்தில் இட்லி குறித்த போஸ்ட் அதிகளவில் தென்படுகிறது. நேரம் பார்த்து இட்லி மாவு தயாரிக்கும் நிறுவனங்கள் விளம்பரத்தை அள்ளி வீசியுள்ளனர்.
இந்த வாய்ப்பை ஸ்விக்கி விட்டுவிடுமா என்ன..? கிடைக்கும் கேப் அனைத்திலும் தன்னுடைய பிராண்டை முன்னிறுத்துவதில் பிரபலமாக இருக்கும் ஸ்விக்கி உலக இட்லி தினத்தில் இட்லி குறித்து முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி
இந்தியாவின் 2வது பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, கடந்த ஓராண்டில் 3.3 கோடிக்கும் அதிகமான தென்னிந்திய உணவான இட்லியை டெலிவரி செய்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இட்லி வெறியர்
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பயனர் கடந்த 12 மாதங்களில் இட்லிக்காக மட்டுமே சுமார் 6 லட்சம் ரூபாயை செலவிட்டதையும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. யாரு சாமி நீ, பிரியாணி வெறியர்கள் தெரியும், நீங்க இட்லி வெறியரா இருப்பீங்க போலியே..
12 மாதம்
ஸ்விக்கி நிறுவனம் மார்ச் 30, 2022 முதல் மார்ச் 25, 2023 வரையிலான காலக்கட்டத்தில் தனது ஆர்டர் விபரங்களை அலசி ஆராய்ந்து இந்த தரவுகளை வெளியிட்டு உள்ளது. மேலும் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இட்லி அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட டாப் மூன்று நகரங்கள் என்றும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூர், ஹைதராபாத், சென்னை
பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை தொடர்ந்து மும்பை, கோயம்புத்தூர், புனே, விசாகப்பட்டினம், டெல்லி, கொல்கத்தா மற்றும் கொச்சி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. எளிதாக வீட்டில் செய்யக்கூடிய உணவாக இருந்தாலும், இட்லிக்கு இணையத்திலும் டிமாண்ட் அள்ளுது.
முக்கிய நேரம்
காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் தான் இட்லி-க்கு அதிகப்படியான ஆர்டர் செய்துள்ளதால் மிகவும் பிரபலமான நேரம் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் மும்பையில் இருந்து நுகர்வோர் இரவு உணவின் போதும் இட்லிகளை ஆர்டர் செய்கிறார்கள் என்றும் ஸ்விக்கி கூறுகிறது.
பிரபலமான 5 ஹோட்டல்
பெங்களூர் மற்றும் சென்னையில் உள்ள A2B - அடையாறு ஆனந்த பவன், ஹைதராபாத்தில் வரலட்சுமி டிஃபின்ஸ், சென்னையில் உள்ள சங்கீதா வெஜ் உணவகம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள உடிபி உபஹார் ஆகியவை தான் இட்லிக்கு பிரபலமான முதல் ஐந்து உணவகங்கள் என்று ஸ்விக்கி நிறுவனம் தனது வாடிக்கையாளர் தரவுகளை வைத்து தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications