மும்பை: 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து ஹூண்டாய் கிரெட்டா மிட் சைஸ் எஸ்யூவி கார் விற்பனை சக்கை போடு போடுகிறது. அறிமுகமாகி எட்டு ஆண்டுகாலம் போனதே தெரியவில்லை. இதுவரை 10 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) பெட்ரோல், டீசல் மாடல்கள், டர்போ உள்ளிட்ட பலவகையான இன்ஜின் ஆப்ஷன்கள் என அதன் பன்முகத் தன்மைக்கு பெயர் பெற்றது. இப்போது இந்த எஸ்யூவியில் மூன்று இன்ஜின் தேர்வுகள் உள்ளன. அவை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும்.

கிரெட்டாவில் சன்ரூஃப், டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கனக்டடு கார் டெக்னாலஜி, இன்னும் பல அம்சங்கள் இதில் உள்ளது.
காம்பாக்ட் சைஸாக இருந்தாலும் அதன் இன்டீரியர் ஸ்பேஸ் பெரிதாக உள்ளது. பயணிகள் அமர்வதற்கும் லக்கேஜ்கள் வைப்பதற்கும் தாராளமான இடவசதி உள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக கிரெட்டா காரின் விலை கவர்ச்சிகரமான பட்ஜெட்டுக்குள் அடங்கும் அளவுக்கு இருப்பதால் வாடிக்கையாளர்கள் இந்தக் காரை விரும்பி வாங்குகின்றனர்.
2024 இல் ஹூண்டாய் கம்பெனி ஃபேஸ் லிப்ட் செய்து ரூ.11 லட்சத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது எக்ஸ்ஷோரூம் விலை ஆகும்.
அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை 60,000 பேர் புக்கிங் செய்துள்ளனர்.
புதிய ஹூண்டாய் கிரெட்டா ஹோம்-டு-கார் அலெக்சா அம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதுமையான ஹூண்டாய் புளுலிங்க் பயன்பாடு உங்கள் வீடு அல்லது அலுவலகத்திலிருந்து உங்கள் காரைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.
கிரெட்டா வெற்றிக்கு காரணமே, வாடிக்கையாளர்கள் கேட்காவிட்டாலும் அவ்வப்போது ஃபேஸ்லிப்ட் செய்வதுதான். முதல் ஜெனரேசன் கிரெட்டா கார்கள் எல்லோராலும் வியந்து பார்க்கப்பட்டது. இந்த வருடம் துவக்கம் வரை தொடர்ந்த கிரெட்டாவின் முன்புறம் சிலருக்கும், பின்புறம் சிலருக்கும் பிடிக்கவில்லை என்றபோதிலும், விற்பனையில் நம்பர் 1தான். அப்படியும் கிரெட்டா ஃபேஸ்லிப்ட் செய்து வந்துள்ளது.
10 லட்சம் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனையானது அந்த கம்பெனிக்கு ஒரு சாதனையாகும். 5 நிமிடங்களுக்கு ஒரு கிரெட்டா விற்பனையாகிறதாம் இந்தியாவில். கியாவின் ஷெல்டாஸ் மாடல்கள் கிரெட்டாவுக்கு போட்டிதான் என்றபோதிலும், அதிகப்படியான ஷோரூம் மற்றும் நீண்டகால நட்பு ஹுண்டாய் கம்பெனிக்கு ஒரு பிளஸ். எனவே கிரெட்டா விற்பனையில் எப்போதுமே ஷெல்டாசை முந்துகிறது.
Article written by: Jayachandran


Click it and Unblock the Notifications