எங்கு பார்த்தாலும் தற்போது தங்கம் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர் அந்த அளவிற்கு தங்கத்தின் மதிப்பு பல வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டி இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் தங்கம் வாங்கி வையுங்கள் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என்று தான் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
சர்வதேச நிபுணர்களில் தொடங்கி உள்ளூரில் இருக்கக்கூடிய நிதி ஆலோசகர்கள் வரை இயன்ற அளவு தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என கூறி வருகின்றனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச நிலவரங்கள் முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன . இத்தகைய சூழலில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் தான் எப்பொழுதுமே தங்கத்தை தான் நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விரிவாக பதிவு செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, நான் நீண்ட காலமாக கரன்சி மதிப்பிழப்புக்கு (currency debasement) எதிரான ஒரு காப்பீடாக தங்கம் தான் இருக்கிறது இதனை 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக நான் நம்புகிறேன் என கூறியிருக்கிறார். நீண்ட கால அடிப்படையில் தங்கம் தன் வாங்கும் சக்தியை தக்க வைத்துக் கொண்டுள்ளது மேலும் பரந்த சந்தை குறியீடுகளுக்கு எதிராகவும், தங்கம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.
எனக்கு கிரிப்டோவில் ஆர்வம் இல்லை என அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக லின் ஆண்டின் என்பவரின் பதிவு ஒன்றையும் அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார். தற்போது உலக அளவில் அனைவரும் முதலீடு செய்யக்கூடிய ஒரு பொருளாக தங்கம் தான் இருக்கிறது .அதற்கு அடுத்த இடத்தில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகள் இருக்கின்றன .
ஆனால் கிரிப்டோ கரன்சி சந்தைகளை பொருத்தவரை அவை அதிக ஏற்ற இறக்கம் நிறைந்தவையாக இருக்கின்றன. ஒரு நொடியில் உச்சத்தை தொட்டால் அடுத்த நொடியில் வீழ்ச்சி அடையும் என்ற அளவில் கிரிப்டோ சந்தைகள் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் தங்கத்தை பொருத்தவரை நிலையாக நீடித்த வளர்ச்சியை பெற்று வருகிறது.
இந்த சூழலில் தான் ஸ்ரீதர் வேம்பு தான் தனக்கு கிரிப்டோவில் ஆர்வம் இல்லை தங்கம் தான் என்னுடைய நம்பிக்கை என பதிவு செய்திருக்கிறார். லின் ஆண்டின் என்பவர் பத்திரம் ,பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது தங்கம் எப்படி நீடித்த நிலையான ஒரு வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதில் தங்கத்தின் வளர்ச்சியையும் தங்கத்தின் மதிப்பையும் நாம் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு செய்து பார்க்கும் போது எந்த ஒரு சொத்தும் இந்த அளவிற்கு சிறந்த வளர்ச்சியும் அடையவில்லை எனக் கூறியிருக்கிறார். ரியல் எஸ்டேட் கூட தங்கத்துக்கு நிகரான வளர்ச்சியை அடையவில்லை என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .


Click it and Unblock the Notifications