கடந்த ஓராண்டு காலமாகவே இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் தினமும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது தங்கம் விலை. ஏனெனில் அந்த அளவிற்கு தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. கடந்த ஆண்டு மத்தியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று இந்தியாவில் சில்லறை வணிகத்திலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் விலை 1.30 லட்சம் ரூபாய் கடந்தது. அதன் பிறகு தங்கம் விலை சரிவடைந்து ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உள்ளாகவே நீடிக்கிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.14 லட்சம் முதல் 1.19 லட்சத்திற்குள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

இந்த சூழலில் இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு ஒரு முக்கியமான தரவினை வெளியிட்டிருக்கிறது. ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்தது ஆனால் அதே மாதத்தில் தங்கம் இறக்குமதியும் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. தங்கம் இறக்குமதி வரலாறு காணாத அளவு அதிகரித்ததால் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்திருப்பதாக அரசின் அறிக்கையே சுட்டிக் காட்டுகிறது.
2026 ஜனவரியில் நாட்டின் சரக்கு வர்த்தக பற்றாக்குறை 34.7 பில்லியன் டாலர் உயர்ந்திருக்கிறது, இது டிசம்பர் மாதத்தில் 25 பில்லியன் டாலராக தான் இருந்தது. நாட்டில் இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்தது வர்த்தக பற்றாக்குறை உயர்வதற்கு காரணம். இந்த இறக்குமதியிலும் பெரும்பாலான இறக்குமதி தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களாகவே இருந்தது என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது ஆனால் தங்க நகை விற்பனை சரிந்து இருக்கிறது என கூறுகிறார் தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவரான சுரேந்திர மேத்தா. அப்படி என்றால் இறக்குமதி செய்யப்படும் தங்கம் எங்கு தான் போகிறது யாரிடம்தான் சென்று சேர்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் அளித்திருக்கும் சுரேந்திர மேத்தா மக்கள் தங்கத்தை வாங்கும் போக்கில் பெரிய மாற்றம் வந்திருப்பதாக கூறுகிறார்.
அதாவது தங்கத்தை நகைகளாக வாங்குவதை கடந்து அவற்றை ஒரு நிதி சார்ந்த சொத்துக்களாக பார்க்க மக்கள் தொடங்கி விட்டார்கள் என சுட்டிக்காட்டுகிறார். எனவே ஏராளமானவர்கள் தங்கத்தை நகைகளாக வாங்காமல் காகித வடிவிலான முதலீடுகளாக வாங்குகின்றனர் என குறிப்பிடுகிறார். தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்ததால் மக்கள் மற்ற சொத்து வகைகளில் இருந்து தங்கத்திற்கு மாறி வருகின்றனர் என குறிப்பிட்டு இருக்கும் அவர் தங்கத்தை முதலீடாக வாங்கும் விகிதம் 28% ஆக தான் இருந்தது தற்போது 45 %-ஐ கடந்து விட்டது என சுட்டிக்காட்டுகிறார்.
மக்கள் தங்கத்தை வாங்கி நுகர்வு பொருளாக பயன்படுத்தாமல் ஒரு முதலீடாக வாங்குகின்றனர் என்கிறார். இதனால் தான் தங்கம் இறக்குமதி அதிகரித்தாலும் நகை விற்பனை குறைந்து இருக்கிறது ஆனால் தங்கத்தில் செய்யப்படும் முதலீடு அளவு அதிகரித்து வருகிறது என குறிப்பிடுகிறார். அதாவது கோல்டு ஈடிஎஃப் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது என்கிறார்.
திருமண சீசன் வருவதால் அடுத்த சில மாதங்களுக்கு தங்க நகை விற்பனையில் சற்றே முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் அவர் புவிசார் மற்றும் அரசியல் ரீதியிலான எதிர்மறை செய்திகள் வராமல் இருக்கும் வரை தங்கத்தின் விலை மாறாமல் இருக்கும், ஆனால் ஒரு சிறிய அளவிலான புவிசார பதற்றமோ அல்லது வர்த்தக மோதலோ ஏற்பட்டால் கூட உடனடியாக தங்கத்தின் விலை உயர்ந்துவிடும் என கூறுகிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!



Click it and Unblock the Notifications