இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி பல்வேறு காரணங்களுக்காக முதலீட்டை ஈட்ட முடிவு செய்து QIP எனக் கூறப்படும் qualified institutional placement வழியில் சுமார் 2 பில்லியன் டாலர் அதாவது 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் தனது முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம்.
இந்த அறிவிப்பின் எதிரொலியாக ஐசிஐசிஐ வங்கியின் பங்கு மதிப்பு கடந்த 2 நாட்களில் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 15 நொடியில் விற்றுத் தீர்ந்த சீன போன்கள்! எகிறிய விற்பனை! குஷியில் சீன கம்பெனிகள்!

பங்கு விலை
ஐசிஐசிஐ வங்கி தற்போது விற்பனை செய்யும் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஒரு பங்கு 351.36 ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தற்போதைய சந்தையை விலையை விடவும் குறைவாகும். இதனால் முதலீட்டாளர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.

தள்ளுபடி விலை
பொதுவாகவே QIP வழியில் பங்குகளை விற்பனை செய்யும் போது சந்தை விலையை விடவும் குறைவான விலையில், அதாவது தள்ளுபடி விலையில் தான் நிறுவனங்கள் விற்பனை செய்யும். இதன் வாயிலாகவே அதிகளவிலான முதலீட்டாளர்களை ஈர்த்து தனது முதலீட்டு இலக்கை அடைய முடியும். இதையே தான் தற்போது ஐசிஐசிஐ வங்கியும் பின்பற்றியுள்ளது.

தொடர் உயர்வு
ஐசிஐசிஐ வங்கி பங்கு விற்பனையை அறிவித்த நிலையில் இந்நிறுவனப் பங்கு மதிப்பு கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 358.10 ரூபாய்க்கு வர்த்தகம் முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 367 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

ஆலோசனை நிறுவனம்
ஐசிஐசிஐ வங்கி விற்பனை செய்யும் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளுக்குப் பாங்க் ஆப் அமெரிக்கா, மோர்கன் ஸ்டான்லி, பிஎன்பி பரிபாஸ், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் ஆகிய நிறுவனங்களை ஆலோசனை நிறுவனங்களாக ஐசிஐசிஐ வங்கி நியமித்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, இன்போ எட்ஜ், ஆலிம்பிக் பார்மா ஆகிய முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து QIP எனக் கூறப்படும் qualified institutional placement வழியில் பங்குகளை விற்பனை செய்து சுமார் 26,600 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டியுள்ளது.

வங்கிகள்
அடுத்து வரும் வாரங்களில் NBFC, நிதியியல் நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்து தரப்பினரும் நிதி தேவைக்காக QIP வழியில் பங்குகளை விற்பனை செய்து அதிகளவிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
எதற்காக இந்தத் திடீர் பங்கு விற்பனை..?

காரணம்
இந்திய வங்கிகளில் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் கடன் சலுகை கொடுத்துள்ளது, இந்தியாவில் தற்போது மொத்தம் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வராக் கடன் இருக்கும் நிலையில், சலுகை முடிந்த பின்பு 5ல் ஒரு 1 பங்கு கடனை செலுத்த முடியாமல் போனாலும் இந்திய வங்கிகளின் வராக் கடன் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அளவை விடவும் கிட்டதட்ட 2 மடங்கு அதிகமாகும்.

பிரச்சனை
இந்த வராக்கடன் பிரச்சனையைச் சமாளிக்க வங்கிகள் கையில் இருக்கும் ஓரே வழி, ஏற்கனவே கடன் கொடுத்தவர்களுக்கு மறு கடன் கொடுத்து அவர்களின் வர்த்தகத்தை மீட்டு எடுப்பதே ஆகும். ஆனால் இதுவும் கணிசமான அளவு வராக்கடனைக் குறைக்க மட்டுமே பயன்படும் என்பது வங்கித்துறை வல்லுநர்களின் கணிப்பு.

நிதி தேவை
வராக்கடன் பிரச்சனையைச் சமாளிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கண்டிப்பாக மறு கடன் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்போது, மறு கடன் கொடுக்கப் போதிய நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி தேவை பிரச்சனையைத் தான் பங்கு விற்பனை மூலம் சரிசெய்வதாகக் கூறப்படுகிறது.
வங்கி அல்லாத நிறுவனங்கள் வர்த்தக வளர்ச்சிக்காகவும், விரிவாக்கத்திற்காகவும், கடன் சுமையைக் குறைப்பதற்காகவும் பங்குகளை விற்பனை செய்கிறது.