2025 ஆம் ஆண்டு முழுவதுமே பேசு பொருளாக இருந்தது தங்கம் தான். ஏனெனில் 2025 ஆம் ஆண்டு மத்தியிலிருந்து தங்கத்தின் விலை வேகமாக உயரத் தொடங்கியது. நடப்பாண்டில் கூட ஜனவரி மாதம் 29ஆம் தேதி வரை தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டது.அதன் பின்னர் தங்கத்தின் விலை சரிந்தது குறிப்பாக ஈரான் போர் தொடங்கிய பிறகு தங்கத்தின் விலையில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது.
கடந்த இரண்டரை மாதங்களாக தங்கம் விலை பெரிய அளவில் உயரவும் இல்லை பெரிய அளவில் குறையவும் இல்லை. இதே நிலைமைதான் நீடிக்குமா அல்லது கடந்த ஆண்டை போடவே இந்த ஆண்டும் இறுதி மாதங்களில் தங்கத்தின் விலை பல மடங்கு உயருமா என்பதுதான் ஏராளமான பொதுமக்களுக்கும் , முதலீட்டாளர்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய கேள்வி அந்த கேள்விக்கு விடை கொடுக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டு இருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வு குழு வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய அறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும், உலக சந்தையில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் வரை வேகமாக வளர்ச்சி அடைந்த தங்கத்தின் மதிப்பு படிப்படியாக சரியத் தொடங்கியது, ஈரான் போர் அதற்கு இன்னுமொரு ஊக்கம் தரும் விஷயமாக மாறியது என கூறுகிறது.
போர் காரணமாக கச்சா எண்ணெயும் அமெரிக்க டாலரும் சந்தையில் மதிப்புமிக்க பொருட்களாக மாறின. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து முதலீடுகளை எடுத்து கச்சா எண்ணெயிலும் டாலரிலும் முதலீடு செய்ய தொடங்கினார்கள் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஈரான் போர் நிறுத்தமே ஏற்படவில்லை, அதேவேளையில் பெரிய அளவிலான போரும் நடக்கவில்லை ஒரு இழுபறியாகவே நீடிக்கிறது என்றால் உலக சந்தையில் குறுகியன் காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4600 டாலர்கள் வரை செல்லும் என கூறுகிறது. ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையே மிகத் தீவிரமான போர் மீண்டும் தொடங்கினால் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4200 டாலர்களாக குறையும் என தெரிவித்திருக்கிறது.
அடுத்த சில மாதங்களுக்கு உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4400 இல் இருந்து 4600 டாலர்கள் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என தெரிவிக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு தன்னுடைய வரலாற்று உச்ச விலையில் இருந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் வங்கிகளும் தங்கத்தை வாங்கி வைக்கின்றன, அமெரிக்கா போன்ற நாடுகளின் கடன் அளவு அதிகரித்து இருக்கிறது எனவே இதன் காரணமாக நீண்ட கால அடிப்படையில் விலை உயரும் என தெரிவிக்கிறது.
அதாவது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4800 இல் இருந்து 5000 டாலர்கள் என்ற அளவை எட்டும் என்றும் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அது 5600 டாலர்கள் வரை செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கணித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. இந்தியாவில் தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டிருக்கிறது இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்திய சந்தையில் அடுத்த சில மாதங்களுக்கு 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.5 லட்சம் 1.8 லட்சம் ரூபாய் என்ற வரம்புக்குள் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.90 லட்சம் ரூபாய் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. இன்றைய நாளை பொறுத்தவரை சென்னையில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,60,690 ரூபாயாக இருக்கிறது. அதிலிருந்து கிட்டதட்ட 30 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை உயரும் என்பதே ஐசிஐசிஐ வங்கியின் கணிப்பாக இருக்கிறது. அதாவது தற்போதுள்ளதை விட 18% விலை உயர வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


