பொதுவாக கடன் இல்லாத நிறுவனங்கள் நல்ல நிறுவனங்கள் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் ஒரு நிறுவனத்துக்கு கடன் இருப்பதால் அந்த நிறுவனம் நல்ல நிறுவனம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. பல நிறுவனங்கள் தங்களது வர்த்தக விரிவாக்க நடவடிக்கைக்கு தேவையான நிதியை திரட்ட கடன் வாங்குகின்றன. இப்படி கடன் உள்ள நிறுவனங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை அந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதத்தை (ஐசிஆர்) வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம். வட்டி பாதுகாப்பு விகிதம் என்பது ஒரு நிறுவனம் தனது கடன் செலுத்துதல்களை எவ்வளவு சிறப்பாக கையாள முடியும் என்பதை காட்டும் ஒரு நிதி அளவீடாகும்.
நிறுவனத்தின வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாயை (இபிஐடி) அதன் வட்டி செலவால் வகுப்பதன் மூலம் வட்டி பாதுகாப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது. இந்த விகிதம் நிறுவனத்தின் நிதி நல்வாழ்வு பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது. பொதுவாக ஒரு நிறுவனத்தின வட்டி பாதுகாப்பு விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருந்தால் அது சிறப்பானது. இந்த விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருந்தால், அந்த நிறுவனம் அதன் வட்டி செலுத்தல்களை எளிதாக ஈடுகட்ட (வழங்க) போதுமான வருவாயை ஈட்டுகிறது என்பதை காட்டுகிறது. ஐசிஆர் 2 சதவீதத்துக்கு மேல் இருந்தால் கடன் வழங்குபவர்கள் நிறுவனத்துக்கு தயக்கமின்றி கடன் வழங்க வாய்ப்புகள் அதிகம்.

வலுவான வட்டி பாதுகாப்பு விகிதம் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை காட்டினாலும், நிறுவனம் தனது வருவாயில் கணிசமான பகுதியை கடனை அடைக்க பயன்படுத்துகிறது. இதனால், பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் அல்லது தக்க வருவாய் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் பங்குதாரர்கள் பொதுவாக நிறுவனத்தின் ஐசிஆர் விகிதம் 3 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும் விரும்புகிறார்கள். மேலும் இந்த விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதை பங்குதாரர்கள் விரும்பமாட்டார்கள். ஐசிஆர் விகிதம் 2க்கு மேல் இருந்தால் பங்குதாரர்களுக்கு எவ்வளவு ஆதாயம் என்பதை பார்ப்போம்.
உதாரணமாக ஒரு நிறுவனத்தின் ஐசிஆர் விகிதம் 1 என்று வைத்துக்கொள்வோம். அந்நிறுவனம் வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாயாக ரூ.100 ஈட்டுகிறது என்றால் அந்த ரூ.100ம் கடன்தாரர்களுக்கு சென்று விடும். அரசு (வரி) மற்றும் பங்குதாரர்களுக்கு வருமானம் கிடைக்காது. அதேசமயம், ஒரு நிறுவனத்தின் ஐசிஆர் விகிதம் 2 என்று வைத்துக்கொள்வோம். அந்நிறுவனம் வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாயாக ரூ.100 ஈட்டுகிறது என்றால் அந்த ரூ.50ம் கடன்தாரர்களுக்கு செல்லும். அதேசமயம் அரசுக்கு ரூ.15ம், பங்குதாரர்களுக்கு ரூ.35ம் கிடைக்கும்.
ஒரு நிறுவனத்தின் ஐசிஆர் விகிதம் 3 என்று வைத்துக்கொள்வோம். அந்நிறுவனம் வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாயாக ரூ.100 ஈட்டுகிறது என்றால் அந்த ரூ.33.33ம் கடன்தாரர்களுக்கு செல்லும். அதேசமயம் அரசுக்கு ரூ.20ம், பங்குதாரர்களுக்கு ரூ.46.67ம் கிடைக்கும். ஒரு நிறுவனத்தின் ஐசிஆர் விகிதம் 4 என்று வைத்துக்கொள்வோம்.
அந்நிறுவனம் வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாயாக ரூ.100 ஈட்டுகிறது என்றால் அந்த ரூ.25ம் கடன்தாரர்களுக்கு செல்லும். அதேசமயம் அரசுக்கு ரூ.22.50ம், பங்குதாரர்களுக்கு ரூ.52.50ம் கிடைக்கும். எனவே நிறுவனத்தின் ஐசிஆர் விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருந்தால் அந்நிறுவனம் தனது வட்டி செலுத்தல்களை செலுத்த போதுமான வருவாயை ஈட்டுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Story Written by: subramanian
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications