இன்று வெற்றிகரமான தொழிலதிபர்களாக வரும் பலரும் ஒரு காலத்தில் வறுமையில் துவண்டு, தங்களது கடின உழைப்பால் அதில் மீண்டும் வந்தவர்களாக இருப்பர். பிரபல மாவு நிறுவனமான ஐ.டி. ப்ரெஷ் புட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.சி. முஸ்தாபாவின் வாழ்க்கை அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. 6ம் வகுப்பில் பெயிலான ஒரு பையன் ரூ.2,000 கோடி நிறுவனத்துக்கு உரிமையாளராக ஆவார் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.
கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் விவசாய கூலித் தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் பி.சி. முஸ்தபா. 6ம் வகுப்பில் பெயில் ஆனதால் படிப்பை பாதியில் விட்டு விட்டு தந்தையுடன் விவசாய வேலைக்கு சென்று வந்தார்.

இந்த சூழ்நிலையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் முஸ்தபா பள்ளி திரும்பவும், படிப்பை முடிக்கவும் உதவினார். கோழிக்கூட்டில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் படித்தார். 1995ல் என்ஜினீயரிங் படிப்பை முடித்த அவர் மோட்டோரோலா நிறுவனத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
வெளிநாட்டில் அவர் பணிபுரிந்த காலத்தில் அவருக்கு வர்த்தகம் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனையடுத்து ரூ.15 லட்சம் சேமிப்புடன் இந்தியா திரும்பினார். பெங்களூரு ஐ.ஐ.எம்.-ல் வர்த்தக நிர்வாகம் தொடர்பான படிப்பை படித்தார். அங்கு படித்தபோது, இந்தியாவில் வீடுகளில் காலை உணவில் தென்னிந்திய உணவு வகைகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார்.
இதனையடுத்து இட்லி, தோசை மாவு நிறுவனத்தை தொடங்கினால் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற யோசனை அவருக்கு எழுந்தது. பின்பு 2005ல் பெங்களூருவில் ரூ.50,000 முதலீட்டில் 50 சதுர அடி கடையில் இட்லி தோசை (ஐ.டி.) ப்ரெஷ் புட்ஸ் என்ற மாவு விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்.
2015ம் ஆண்டுக்குள் ஐ.டி. ப்ரெஷ் புட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.100 கோடியை எட்டியது. 2023ல் ஐ.டி. ப்ரெஷ் புட்ஸ் நிறுவனம் வருவாயில் ரூ.500 கோடி என்ற மைல்கல்லை எட்டியது. இன்று இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,000 கோடியாக உள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தனது நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் துபாயிலும் வர்த்தகத்தை விரிவுப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், ஐடி ப்ரெஷ் புட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பி.சி. முஸ்தபா பாட்காஸ்ட் பேட்டி ஒன்றில், எனது தந்தை ஒரு தினக் கூலி. எங்கள் குடும்பத்தை நடத்துவதற்காக ஒரு இஞ்சி பண்ணையில் வேலை செய்தார். வருமானமும் குறைவு மற்றும் தினமும் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாதது. என் தந்தை தினமும் ரூ.10 சம்பாதித்தார்.
இது எங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு போதாது. நானும் எனது சகோதரர்களும் என் தந்தைக்கு உதவவும், குடும்பத்துக்கு தேவையான வருமானத்தை ஈட்டுவதற்கும் சிறிய வேலைகளை செய்தோம். விறகுகளை சேகரித்து விற்பனை செய்தோம். எனது 10 வயதில் எனது தந்தைக்கு விவசாய வேலையில் உதவ தொடங்கினேன்.
அப்பாவுடன் இஞ்சி பண்ணையில் வேலை செய்து சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்தேன். பணம் ஒரளவு சேர்ந்தவுடன் ஒரு ஆட்டை வாங்கினேன். அது சுமார் ரூ.150 இருக்கும் என்று நினைக்கிறேன். நான் வாங்கிய அந்த ஆடுதான் எங்க குடும்பத்தின் முதல் சொத்து. ஆடுகளின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. அந்த ஆடுகளை விற்று ஒரு பசு மாட்டை வாங்கினேன்.
அந்த பசு வாயிலாக எங்கள் குடும்பத்திற்கு முதல் முறையாக நிலையான ஒரு வருமானம் உறுதி செய்யப்பட்டது. பசுவின் பால் விற்பனை எங்கள் குடும்பத்தை நிர்வகித்தது, நாங்கள் ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட முடிந்தது என தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications