இந்தியாவில் அடுத்த 5 வருடம் ஆட்சி யாருடைய கையில் இருக்கப்போகிறது? பிஜேபி கூட்டணியா? INDIA கூட்டணியா..? மக்கள் யார் பக்கம்? இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டு வரும் வேளையில் பொதுத் தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதேவேளையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கின்றனர், ஏனென்றால் வந்த செய்தி அப்படிப்பட்டது.
2024 பொது தேர்தலில் 6ஆம் கட்ட தேர்தல் மே 25 ஆம் தேதி முடிந்த நிலையில், ஜூன் 1 ஆம் தேதி கடைசிக் கட்டம் அதாவது 7ஆம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இந்த 7ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலத்தில் சுமார் 56 தொகுதிகளில் நடக்கிறது.

இந்த 7ஆம் கட்ட தேர்தலில் பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநிலத்தில் 13, 12 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. கடைசி கட்டம் என்பதால் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, குறிப்பாகச் சமீபத்தில் மோடியின் பேச்சு இணைய வாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் அல்லாமல் அம்பானி, அதானியும் அவருடன் சேர்த்து விமர்சனம் செய்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழ்நிலையில் பொது தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையையும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் எப்படி பாதிக்கும் என்பது குறித்து பிரபல முதலீட்டாளர் பேசியது கூடுதல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 250 இடங்களுக்குக் குறைவாக வெற்றி பெற்றால், பங்குச்சந்தை தடாலடியாக வீழ்ச்சியைச் சந்திக்கும் என பிரபல முதலீட்டாளர் ருசிர் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பையில் இந்தியா டுடே-வின் பாப்-அப் கான்க்ளேவில் பேசிய ராக்ஃபெல்லர் இன்டர்நேஷனல் தலைவர் ருசிர் சர்மா, பாஜக 250 இடங்களைப் பெறத் தவறினால், பங்குச்சந்தை 10-20 சதவீதம் வீழ்ச்சியடையக்கூடும் என்று கூறியது பல பங்குச்சந்தை முதலீட்டாளர்களை தூக்கிவாரிப்போட்டு உள்ளது.
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த வேளையில், சமீபத்தில் 4 டிரில்லியன் டாலர் என்ற மாபெரும் சந்தை மதிப்பீட்டைத் தொட்டது. இதன் மூலம் உலகின் "மிக விலையுயர்ந்த" பங்குச் சந்தைகளில் ஒன்றாக இந்தியாவின் மும்பை பங்குச்சந்தை திகழ்கிறது.
இதேவேளையில் தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும் என கணிப்புகள் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த ஒரு வாரமாக ப்ளூ சிப் பங்குகள் மீது முதலீடு செய்யும் போக்கு நிலவுகிறது. இதேபோல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும் ருசிர் சர்மா கூறுகையில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான சூழல் பெரிய அளவில் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கு மேல் பொருளாதாரத்தின் பங்கு அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டு உள்ளது என்றும் ருசிர் சர்மா தெரிவித்தார்.
கடந்த ஐந்தாண்டுகளில், இந்திய பங்குச்சந்தை வெளிநாட்டு முதலீடுகளின் ஆதிக்கம் குறைந்து உள்நாட்டு மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் மாற்றம் நடந்துள்ளது. உள்நாட்டு முதலீடுகள் காரணமாக இந்தியா தனது செல்வத்தை மேம்படுத்தியுள்ளது என்றார் ருசிர் சர்மா.
வருமான சமத்துவமின்மை குறித்து எச்சரித்த ருசிர் ஷர்மா, உலகளவில் இந்தியா அதிக பில்லியனர்களைக் கொண்டிருந்தாலும், வருமான சமத்துவமின்மையின் பெரும் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது என்றார். இதை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பணவீக்கத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறது என்றும் ருசிர் சர்மா கூறினார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications