ஈல்டு மேக்சிமைசர் நிறுவனர் யோகேஷ் மேத்தா கூறுகையில் தேர்தல் முடிவு வரை இந்தியப் பங்குச் சந்தை தற்போதைய வரம்பிலேயே இருக்கும் என்று நம்புகிறார். இதேவேளையில் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எந்த துறை பங்குகள் எல்லாம் உயரும் என கணித்துள்ளார்.
இதேபோல் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை NSE நிஃப்டி குறியீடு 21,700 மற்றும் 22,800 க்கு இடையில் இருக்கக்கூடும் என்று கூறினார். மே 17 இல் முடிவடைந்த வாரத்தில் நிப்டி குறியீடு 1.86% வளர்ச்சியுடன் முடிந்தது, முந்தைய வாரத்தில் 1.87% சரிவுக்குப் பிறகு இது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ் ஆக அமைந்துள்ளது.என்எஸ்இ நிஃப்டி குறியீடு தற்போது 22,466 அளவில் உள்ளது.

இந்த நிலையில் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எந்த துறை பங்குகள் எல்லாம் உயரும் என கணித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரயில்வே, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) போன்ற துறைகள் முதலீட்டாளர்களுக்கு வலுவான வருவாயை வழங்கக்கூடும் என்று சந்தை பார்வையாளர் நம்புகின்றனர் என்பது ஈல்டு மேக்சிமைசர் நிறுவனர் யோகேஷ் மேத்தா-வின் கருத்து.
இதற்கு பின்னால் இருக்கும் ஓரே விஷயம், மீண்டும் இதே ஆட்சி அமைந்தால் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட capex துறைக்கான முதலீடுகள் தான். இந்தியாவின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி capex துறை ஒதுக்கப்படும் அதிகப்படியான முதலீட்டில் தான் இயங்கி வருகிறது. இதில் மாற்றம் ஏற்பட்டால் பங்குச்சந்தையிலும் மாற்றம் ஏற்படும்.
மேலும் இந்தத் துறைகளின் பங்குகள் அவற்றின் மிகையான வருவாய் காரணமாகப் பங்குச்சந்தையில் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உதாரணமாக, மே 17, 2023 முதல், அஸ்ட்ரா மைக்ரோவேவ் ப்ராடெக்ட்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் 124% மற்றும் 194% வளர்ச்சியை பகிவு செய்துள்ளது.
NIBE Ltd, Bharat Dynamics, Data Patterns, Paras Defense and Space Technologies ஆகியவை முறையே 288%, 92%, 81% மற்றும் 35% வளர்ச்சி அடைந்துள்ளது. மறுபுறம், கடந்த 1 வருடத்தில் 50 பொதுத்துறை நிறுவனங்கள் 100%க்கும் அதிகமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications