தங்கம் என்பது ஆடம்பரப் பொருள் என ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தங்கம் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
குறிப்பாக தங்கத்தை சேமித்து வைத்தவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இன்றி வாழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் தங்கம் வாங்கும்போது நாம் வாங்கும் தங்கம் தூய்மையானதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாம் சரியான தூய்மையான தங்கத்தை தான் வாங்குகிறோமா? என்பதை கீழ்கண்ட ஆறு வழிகளில் பரிசோதனை செய்து பார்க்கலாம்.
1. ஹால்மார்க் முத்திரை
முதலில் தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டியது அதில் பொறிக்கப்பட்டுள்ள அடையாளம்தான். ஹால்மார்க் தங்கத்தின் தரம் மற்றும் உற்பத்தி அடையாளம் என்பதால் ஹால்மார்க் முத்திரையை கண்டிப்பாக பார்த்து வாங்க வேண்டும். ஹால்மார்க் இல்லாத தங்கத்தை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
2. தோல் பரிசோதனை
இரண்டாவதாக தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க தோல் பரிசோதனை செய்யலாம். அதாவது நீங்கள் தங்கத்தை சில நிமிடங்கள் கையில் வைத்திருந்தால் உங்கள் கையில் உள்ள வியர்வை தங்கத்துடன் வினைபுரியும். அப்போது உங்கள் தோலின் நிறம் மாறாமல் இருந்தால் தூய்மையான தங்கம் என்றும் தோலின் நிறம் கருப்பாக மாறினால் அது போலியான தங்கம் என்றும் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
3. அமில சோதனை
மூன்றாவதாக தங்கத்தை தூய்மையை கண்டறிய ஒரு எளிய வழி என்னவெனில் அமில பரிசோதனை. சில துளிகள் வினிகரை எடுத்து தங்கத்தின் மீது ஒரு சில நொடிகள் வைக்கவேண்டும். உண்மையான தங்கமாக இருந்தால் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் போலியான தங்கமாக இருந்தால் கருப்பு நிறமாக மாறும். அதை வைத்து தங்கத்தின் தூய்மையை புரிந்துகொள்ளலாம்.
4. பீங்கான் பரிசோதனை
அடுத்ததாக ஒரு துண்டு பீங்கான் அல்லது செராமிக்கை எடுத்து அதன் மேற்பரப்பில் தங்கத்தை லேசாக தேய்க்க வேண்டும். தங்கம் உண்மையானதாக இருந்தால் தங்கத்தின் நிறம் அப்படியே இருக்கும். போலி தங்க நகைகள் என்றால் கருப்பாக மாறும்.
5. தண்ணீரில் மிதக்குமா தங்கம்?
ஐந்தாவதாக தங்கத்தின் தூய்மையை கண்டறிய தங்கத்தை தண்ணீரில் போட வேண்டும். தங்கம் அடர்த்தியான உலோகம் என்பதால் அடிப்பகுதிக்கு சென்றுவிடும். அதில் ஏதேனும் கலப்படம் கலந்திருந்தால் தங்கம் மிதக்கும் என்பதையும் கண்டறிந்து கொள்ளலாம்.
6. காந்த பரிசோதனை
அடுத்ததாக தங்கத்தின் தூய்மையை கண்டுபிடிக்க காந்த பரிசோதனை செய்யலாம். தங்கம் எப்போதும் காந்தத்தால் ஈர்க்கப்படாது. அதில் இரும்பு கலந்திருந்தால் காந்தத்தால் ஈர்க்கப்படும். இதை வைத்து உண்மையான தங்கம் எது? போலி தங்கம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.
விஞ்ஞான ரீதியில் பரிசோதனை
எனினும் மேற்கண்ட பரிசோதனைகள் எல்லாம் ஒரு சில அடிப்படை பரிசோதனை தான் என்பது குறிப்பிடப்பட்டது. தங்கத்தை துல்லியமாக பரிசோதனை செய்ய விஞ்ஞான ரீதியிலான பல வழி முறைகள் தற்போது வந்து விட்டது என்பதும் அதன் மூலம் தங்கத்தை பரிசோதனை செய்தபிறகே தங்கத்தை வாங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications