பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களின் வரி சுமையை குறைக்கும் வகையில், வருமான வரி விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்தது. குறிப்பாக, புதிய வரி விதிப்பு முறையில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், மக்களின் செலவின வருவாய் அதிகரிக்கும், பணப்புழக்கம் மற்றும் நுகர்வு அதிகரிக்கும். இந்திய ரிசர்வ் வங்கியும் அண்மையில் ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் குறைத்தது. சாதகமான வரி விகிதங்கள் மற்றும் ரெப்போ ரேட் குறைப்பு ஆகிய 2 பலன்களையும் நமக்கு சாதகமாக்கி வீட்டு கடனுக்கான வட்டியில் லட்சக்கணக்கில் சேமிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடன் ஆலோசனை சேவையை வழங்கி வரும் Mortgageworld.in நிறுவனத்தின் நிறுவனர் விபுல் படேல் கூறுகையில், பல சம்பளதாரர்கள் இந்த நேரத்தில் தங்கள் வருடாந்திர சம்பள உயர்வுகளையும், செயல்திறன் போனஸையும் பெறுகிறார்கள். இது அவர்களின் செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்கும்.இந்த நிதிகளில் சிலவற்றை பயன்படுத்தி கடன்களை குறைத்து முதலீடுகளை அதிகரிப்பது நல்லது. வீட்டுக் கடன் வாங்கியவர்கள் தங்கள வட்டி சுமையை குறைக்க முயற்சிக்க வேண்டும். சிறிய மாற்றங்கள் (இஎம்ஐ-யில் சிறிய அதிகரிப்பு) கூட லட்சக்கணக்கில் சேமிக்க உதவும் என்றார்.

பேங்க்பஜார் டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி கூறுகையில், ஒருவர் 25 ஆண்டு கால அடிப்படையில் ரூ.50 லட்சம் வீட்டு கடனை 8.50 சதவீத வட்டியில் வாங்கி உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவர் 300 மாதங்கள் மாதந்தோறும் இஎம்ஐயாக ரூ.40,261 செலுத்த வேண்டும். இப்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக குறைக்கப்பட்டால் அவரது இஎம்ஐ ரூ.39,423ஆக குறையும். ஆனால் அவர் மாதந்திர தவணை தொகையை குறைக்காமல் பழைய தொகையை தொடர்ந்து செலுத்தி வந்தால் உங்களுக்கு 19 இஎம்ஐக்கள் குறையும் இதன் மூலம் வட்டியில் சுமார் ரூ.8 லட்சம் சேமிப்பாகும்.
2025 ஏப்ரல் முதல் ஒருவர் ரூ.25 லட்சம் மொத்த சம்பளம் வாங்குகிறார் என்றால் குறைந்த வரிகள் காரணமாக அவர் ஆண்டுக்கு சுமார் ரூ.1.14 லட்சத்தை மிச்சப்படுத்துவார். இந்த மிச்சப்படுத்தும் தொகையை பயன்படுத்தி அவர் தனது வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ-யை ரூ.5,000 அதிகரிக்க முடியும். அப்படி அவர் மாதந்தோறும் ரூ.45,261 (40,261 + 5,000) இஎம்ஐயாக செலுத்தினால் அவரது தவணை காலம் 208 மாதங்களாக குறையும். மேலும் வட்டியில் சுமார் ரூ.26 லட்சத்துக்கு மேல் சேமிக்க முடியும். மேலும், 17 வருடங்களிலேயே அவர் தனது வீட்டுக் கடனை அடைத்து விடலாம் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications