சமீபத்திய நாட்களில் மோசடி குறித்த செய்திகளை அதிகளவில் பார்த்து வருகிறோம். இந்தப் பதிவிலும் ஒரு மோசடி சம்பவத்தைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம். 25 வயதான ஐஐடி மாணவர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ரூ.7.29 லட்சத்தை இழந்துள்ளார். படித்த நபர்களே இப்படி ஏமாறும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அந்த மாணவரிடம் மோசடி கும்பல் பணம் பறித்துள்ளனர்.
மோசடி எப்படி தொடங்கியது?: ஜூலை மாதம் ஆள் பெயர் தெரியாத நபரிடமிருந்து ஐஐடி மாணவருக்கு அழைப்பு வந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு அதிகாரி (TRAI) போல காட்டிக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அந்த மாணவரின் மொபைல் நம்பர் பயன்படுத்தப்பட்டதாக கூறி பேசியுள்ளார். இதனால் 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மாணவரின் மொபைல் நம்பர் செயலிழக்கப்படுவதைத் தவிர்க்க காவல்துறையிடம் இருந்து NOC பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர். பேசிக்கொண்டே மோசடிக்காரர் மற்றொரு நபருக்கு மொபைலை வழங்கினார். அவர் போலீஸ் அதிகாரி போல உடை அணிந்து கொண்டு வாட்ஸ் அப் வீடியோ காலில் தோன்றி மாணவரிடம் பேசினார்.
பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். அதற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கைது நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்ப்பதற்கு UPI மூலம் 29,500 ரூபாய் அனுப்பும் படி மாணவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவரைப் பின்னர் டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்துள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் என்பது ஒரு தனி அறைக்குள் செய்யாத குற்றத்திற்காக அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களையே தனியாக இருக்கும்படி மிரட்டி பணம் பறிக்கும் புதிய யுக்தி. இந்த சம்பவத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது. அடுத்த நாள் மோசடி செய்பவர்களிடமிருந்து மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அதிக பணம் செலுத்தும் படி கூறியுள்ளனர். அதோடு அந்த மாணவரின் வங்கி விவரங்களையும் கேட்டுள்ளனர்.
வங்கி விவரங்களை வைத்து அந்த மாணவரின் அக்கவுண்டில் இருந்து பணத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. பிறகு அந்த ஐஐடி மாணவர் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது குறித்து அந்த மாணவருக்கு தெரிய வந்தது. அதுவரை மோசடிக்காரர்கள் சொல்வதற்கெல்லாம் இணங்கிய அவர், அலறியடித்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
நம்பர் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறும் போதே நடந்த விஷயம் குறித்து குடும்பத்தார் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்திருந்தால் இவ்வளவு பெரிய நிதி இழப்பு ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம். மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். விழிப்புணர்வை தவிர இது போன்ற மோசடிகளை நிறுத்துவதற்கு வேறு எந்த வழியும் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications