அதிகரிக்கும் சட்டவிரோத தங்க இறக்குமதி..!! சாட்டையை சுழற்றுமா மத்திய அரசு..?

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்திய சந்தைக்குள் முறைகேடாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமான மற்றும் முறைசாரா தங்கம் இறக்குமதி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், இந்தியாவில் அதிகாரப்பூர்வமற்ற அதாவது சட்டவிரோத தங்க இறக்குமதி சுமார் 50 டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 3 டன்களாக மட்டுமே இருந்தது. அப்படி பார்த்தால் முறைகேடாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவது 1,500 சதவீதத்திற்கும் மேல் அதாவது கிட்டதட்ட 15 மடங்கு உயர்ந்துள்ளது. Metals Focus என்ற நிறுவனத்தின் தரவுகள் மூலம் இது தெரிய வந்துள்ளது.

அதிகரிக்கும் சட்டவிரோத தங்க இறக்குமதி..!! சாட்டையை சுழற்றுமா மத்திய அரசு..?

மத்திய அரசு கடந்த மே மாதம் நாட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை திடீரென உயர்த்தியது. ஈரான் போரால் அந்நிய செலாவணி இருப்பை பராமரிக்கவும், தங்கம் இறக்குமதிக்காக டாலர் செலவாவதை தடுக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்கம் மீதான இறக்குமதி வரி 6%இல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்ட நிலையில் தான் முறைகேடாத தங்கம் இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாம்.

Also Read

சட்டப்பூர்வமாக தங்கத்தை இறக்குமதி செய்ய அதிக தொகை கொடுக்க வேண்டும் எனபதால் பலரும் கடத்தல் மற்றும் சட்டவிரோத வழிகளில் தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தல் மற்றும், தனிநபர்கள் மூலம் தங்கத்தை விமானங்களில் கொண்டு வர முயற்சிப்பது என பல வழிகளீல் இது நடக்கிறதாம்.

இதனால் சில நகை கடை நிறுவனங்கள் பில் இல்லாமல் ரொக்கமாக பணத்தை வாங்கி தங்கத்தை விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாம். தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் வாங்கும் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் ரசீது இல்லாமல் தங்கம் வாங்கினால் அது கணக்கிலேயே வராது, மேலும் அது போலி தங்கமாக கூட இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Recommended For You

மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், மீண்டும் 6%ஆக மாற்ற வேண்டும் என நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்படுகிறது. அப்படி மத்திய அரசு தங்கம் மீதான வரியை குறைத்தால் தங்கம் விலை இன்னமும் குறையும். இதனால் தங்கம் விற்பனை அதிகரிக்கும் மேலும் முறைகேடாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவது குறையும், இது அரசுக்கு முறையாக வரி வருவாய் கிடைப்பதையும் உறுதி செய்யும். ஆனால் மத்திய அரசு தான் இந்த முடிவினை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கம் வாங்கும் போது முறையான ரசீது பெறுவது, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தை வாங்குவது போன்றவற்றை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+