செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு துறையும், ஒவ்வொருவரின் பணியை மாற்றி வரும் வேளையில் உலகம் முழுவதும் நிறுவனங்கள் பணிநீக்கம், மறுசீரமைப்பு, ஆட்டோமேஷன் என பல மாற்றங்களை செய்ய துவங்கியிருக்கும் வேளையில் ஒரு முக்கியமான தரவுகள் வெளியாகியுள்ளது.
AI தொழில்நுட்பம் வாயிலாக நடக்கும் மாற்றங்கள் மூலம் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச லேபர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் பணியில் இருக்கும் 10ல் ஒரு பெண் ஏஐ மூலம் தன்னுடைய வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடம் என கணித்துள்ளது. இதுவே மாற்ற நாடுகள் அதாவது வருமானத்தில் பின்தங்கிய நாடுகளில் பெண்களின் பணிநீக்கம் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது.
பெண்கள் விண்ணில் பயணிப்பது முதல் ரேஸ் கார் ஓட்டுவது வரையில் பெரும் சாதனைகளையும், கரியரில் பெரும் உயரத்தை எட்டியிருந்தாலும்.. உலகளவில் கார்ப்ரேட் நிறுவனங்களில் பெண்கள் பெரும்பாலும் நிர்வாக பணிகள், கிளரிக்கல் பணிகள், அலுவலக பணிகள், தரவுகளை சரிபார்ப்பு, தரவுகள் நிர்வாகம் ஆகிய பிரிவில் பணியாற்றுவது அதிகம்.
இத்தகைய பணிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆட்டோமேட் செய்ய முடியும் என்பதால் இத்தகைய பணியில் இருக்கும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டு உள்ளது.
உதாரணமாக வாடிக்கையாளர்களை நேரடியாக எதிர்கொள்ளும் BPO பிரிவில் பெண்கள் அதிகம் பணியாற்றி வரும் வேளையில் இப்பணிகளை ஏஐ மூலம் ஆட்டோமேட் செய்வது மூலம் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாக உள்ளனர்.
இதே நிர்வாக பணியில் இருக்கும் ஆண்களும் AI மூலம் தங்களுடைய பணியை இழப்பது குறித்து தொடர்ந்து பேசி வரும் வேளையில், தற்போது பெண்களை மையப்படுத்தி இந்த ஆய்வறிக்கையை ILO வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் கவனிக்க வேண்டிய ஓன்றாக உள்ளது.
தற்போது ஏஐ மூலம் துறை வித்தியாசம் இல்லாமல் திரும்ப திரும்ப ஒரே பணியை செய்யும் அனைத்து பணிகளுக்கும் ஆபத்து என்ற நிலை தான் உள்ளது.
இதில் BPO பணிகள் முதல் கார் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைவரும் பாதிக்கப்படுவார்கள், ஏஐ மூலம் பணிகளை பயிற்றுவித்து தற்போது பெரும்பாலான பணிகளை ரோபோ வாயிலாக இயங்கி வருகிறது.
இதனால் பெண்கள், ஆண்கள் பேதம் இல்லாமல் இந்த ஏஐ மூலம் பாதிக்கப்பட உள்ளனர். இந்தியா, அமெரிக்கா, சீனா என உலக நாடுகளில் Dark Factories இயங்க துவங்கியுள்ளது. மனிதர்கள் இல்லாமல், லைட் இல்லாமல் இருட்டிலேயே ரோபோக்களை வைத்து 24 மணிநேரமும் 100% ஆட்டோமேட்டெட் தொழிற்சாலைகள் இயங்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

