கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.. வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தையானது சற்று ஏற்றத்தில் தொடங்கினாலும், வாரயிறுதியில் பலத்த சரிவை கண்டது.

 

பலத்த சரிவினை கண்ட தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமர்வில் பெரும் சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது வரவிருக்கும் வாரத்தில் எப்படி இருக்கும்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? சந்தையின் போக்கு எப்படியிருக்கும்? இன்னும் பல விஷயங்களைப் பற்றிதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

மார்கன் ஸ்டான்லி மதிப்பீடு

மார்கன் ஸ்டான்லி மதிப்பீடு

கடந்த வாரத்தில் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய பங்குச்சந்தைகள் குறித்தான தரக் குறியீடு மதிப்பினை, சற்று குறைத்த நிலையில் கடந்த வாரத்தில் பங்குச் சந்தையானது பலத்த சரிவை கண்டது. மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தை தொடர்ந்து, நோமுரா நிறுவனமும் ஈக்விட்டி குறியீட்டினை குறைத்த நிலையில், இது மேற்கொண்டு வரவிருக்கும் நாட்களீல் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் சரிவு?

ஏன் சரிவு?

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரத்தில் பலத்த சரிவில் காணப்பட்டது. இதற்கு அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச காரணிகள் மார்கன் ஸ்டான்லியின் அறிக்கை, எஃப் & ஓ எக்ஸ்பயரி, புராபிட் புக்கிங் உள்ளிட்ட பல காரணிகளால் சந்தையில் பலத்த சரிவு காணப்பட்டது. இவற்றோடு பணவீக்க விகிதம் குறித்தான அச்சமும் மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது எனலாம். இந்த நிலையில் இது வரும் வாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

கடும் சரிவில் சந்தைகள்
 

கடும் சரிவில் சந்தைகள்

குறிப்பாக பிஎஸ்சி சென்செக்ஸ் குறியீடு ஆனது 60,000 புள்ளிகளை உடைத்துள்ளது. இதனால் இன்னும் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்செக்ஸ் 1,514.69 புள்ளிகள் குறைந்து, 59,306.93 புள்ளிகளாக காணப்படுகிறது. இதே நிஃப்டி 18000 புள்ளிகளை உடைத்து, 443.25 புள்ளிகள் குறைந்து 17,671.65 புள்ளிகளாக காணப்பட்டது. குறிப்பாக சந்தைகள் இரண்டாவது வாரமாக செல்லிங் பிரஷரில் காணப்பட்டது. குறிப்பாக தனியார் வங்கிகள், ஐடி மற்றும் மெட்டல், ரியாலிட்டி பங்குகள் உள்ளிட்ட பலவும் மிகப்பெரிய லூசர்களாக இருந்தன.

வெளியாகும் காலாண்டு அறிவிப்புகள்

வெளியாகும் காலாண்டு அறிவிப்புகள்

வரும் வாரத்தில் 350-க்கும் மேலான நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் மாத காலாண்டு அறிக்கையை வெளியிட உள்ளன. இது சந்தையில் பெரும் அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளில் குறிப்பாக மிகப்பெரிய நிறுவனங்களாக ஹெச்டிஎஃப்சி, டாட்டா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சன் பார்மா, ஈச்சர் மோட்டார்ஸ், டிவிஸ் லேபாரட்டீஸ், பார்தி ஏர்டெல், ஐஆர்சிடிசி எச் பி சி எல் உள்ளிட்ட பலவும் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன

கவனிக்க வேண்டிய நிறுவனங்கள்

கவனிக்க வேண்டிய நிறுவனங்கள்

இவற்றோடு ஆதித்யா பிர்லா கேப்பிட்டல், தேவயானி இன்டர்நேஷனல், இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், SPARC, லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கோத்ரேஜ் புராபர்டீஸ், பஜாஜ் ஹெல்த் கேர், பாம்பே டையிங், டாபர் இந்தியா, ஈஸி டிரிப் பிளானர்ஸ், இ கிளர்க் சர்வீசஸ், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், லக்ஷ்மி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ், மிண்டா கார்ப்பரேஷன் எம் டி ஏ ஆர் டெக்னாலஜிஸ், பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ், ரேடிகோ கைத்தான், ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடைல் இந்தியா, பைசர் முத்தூட் பைனான்ஸ், தனலட்சுமி வங்கி, சன் நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது முடிவுகளை வெளியிட உள்ளனர்.

அமெரிக்காவின் பெடரல் வங்கி கூட்டம்

அமெரிக்காவின் பெடரல் வங்கி கூட்டம்

வரும் வாரத்தில் நவம்பர் 2 - 3ம் தேதிகளில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் பத்திரம் வாங்குதல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இது அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்ப்பினை விட மிக மெதுவான நிலையில் இருந்து வரும் நிலையில், மறுஆய்வு செய்யப்படலாம் என்ற நிலையில், முதலீட்டாளர்கள் மிக கவனமுடன் கவனித்து வருகின்றனர். இது வரவிருக்கும் வாரத்தில் அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

டாலர் நிலவரம்

டாலர் நிலவரம்

கடந்த வாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 94.11 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 93.62 டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அமெரிக்க பத்திரிகை சந்தையானது 1.56 சதவிகிதம் சரிவினை கண்டுள்ளது. இது முந்தைய வாரத்தில் 1.64 சதவீதம் சரிவை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இது வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் மாற்றம் இன்றி, 74.93 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 74.99 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஆனது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் காணப்படும் நிலையில், ரூபாயின் மதிப்பும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. இந்த நிலையில் வரும் வாரத்தில் ஃபெடரல் வங்கி கூட்டத்தின் மத்தியில், ரூபாயின் மதிப்பில் பெரிய தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய & உள்நாட்டு முதலீடுகள் வெளியேற்றம்

அன்னிய & உள்நாட்டு முதலீடுகள் வெளியேற்றம்

வரும் வாரத்தில் அன்னிய முதலீடுகள் விகிதமானது சந்தையில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில், அன்னிய முதலீட்டாளர்கள் profit-booking செய்யும் விதமாகவும் முதலீடுகளை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக வெளியேற்றினர். இந்த நிலையில் வரும் வாரத்தில் அன்னிய முதலீடுகள் விகிதமானது அதிகரித்தால் சந்தையானது மேற்கொண்டு இன்னும் முன்னேற்றம் காணலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. வரவிருக்கும் காலத்தில் வாரத்தில் அன்னிய முதலீடுகளின் விகிதமானது சந்தையில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 29 நிலவரப்படி, அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டு விகிதமானது இந்திய சந்தையில் 15,700 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் அதேசமயம் 25,572 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 9,427 ரூபாய் மதிப்பு கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

பொது பங்கு வெளியீடு

பொது பங்கு வெளியீடு

வரவிருக்கும் வாரத்தில் பாலிசி பஜார், சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ், எஸ் ஜே எஸ் என்டர்பிரைசஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும், வரவிருக்கும் நாட்களில் தங்களது பொதுப் பங்கு வெளியீடு செய்ய உள்ளன. இது தவிர பேஷன் நிறுவனமான நய்கா மற்றும் நிதி நிறுவனமான ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பொதுப் பங்கு வெளியீட்டினை தொடங்க உள்ளன. இதுவும் சந்தையில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

வாகன விற்பனை நிலவரம்

வாகன விற்பனை நிலவரம்

நவம்பர் 1 தொடங்கி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்களது அக்டோபர் மாதம் விற்பனை குறித்த தரவினை வெளியிடலாம். இது கடந்த சில மாதங்களாக நிலவி வரும் செமிகண்டக்டர் பற்றாக்குறை மற்றும் மூலதன பொருட்கள் பற்றாக்குறை, குறிப்பாக மூலதன பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட பலவும் உற்பத்தியினை பாதித்துள்ளன. இதற்கிடையில் விலையும் அதிகரித்துள்ள நிலையில் இது உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. எனினும் விழா காலம் தொடங்கியுள்ள நிலையில் இது சற்றே விற்பனையை ஊக்குவித்து இருக்கலாம் என்றும் கருத்தும் நிலவி வருகிறது.

இதனால் வரவிருக்கும் அமர்வுகளில் பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, டிவிஎஸ் மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப், மகிந்திரா & மகிந்திரா, அசோக் லேலண்ட் முக்கிய பங்குகளாக உள்ளன.

கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி

கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி

தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவிவருகிறது. இதற்கிடையில் தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டு வருகின்றது. ஆசியாவின் மிகப்பெரிய முன்னணி நாடான சீனாவில் தற்போது பல நகரங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு சில நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மூன்று நகரங்களில் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தரவுகள்

முக்கிய தரவுகள்

பொருளாதாரம் குறித்து தரவுகள், வரவிருக்கும் நாட்களில் வெளியாகவுள்ள பி எம் ஐ குறித்த குறியீடு, அன்னிய முதலீடுகள் இருப்பு, வங்கி டெபாசிட் & வங்கிக் கடன் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் சந்தையில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது தவிர இன்னும் பல முக்கிய டேட்டாக்கள் வெளியாக உள்ள நிலையில் இதுவும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்

டெக்னிக்கல் பேட்டன் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் பேட்டன் எப்படியுள்ளது?

தினசரி கேண்டில் பேட்டர்னில் நிஃப்டி மேற்கொண்டு சரிவினை காணலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது. இது வரவிருக்கும் நாட்களில் 17,500 புள்ளிகளுக்கு கீழாக வர்த்தகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் ஏற்றம் கண்டால், 18,000 புள்ளிகளை மீண்டும் தொடலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Important things to look out for in the market; Key factors that will determine the market in the coming days

Market latest updates.. Important things to look out for in the market; Key factors that will determine the market in the coming days
Story first published: Sunday, October 31, 2021, 12:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X