25 நாளில் 2 மடங்கு லாபத்தை கொடுத்த 6 ஸ்மால்கேப் பங்குகள்.. முதலீட்டாளர்களின் பணத்தை டபுள்..!!

பங்குச் சந்தையில் 2023 நவம்பர் 30 முதல் 2024 ஜனவரி 5ம் தேதி வரையிலான 25 வர்த்தக தினங்களில் 6 நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்சம் 100 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளன.

இந்த 6 பங்குகளும் சில்லரை முதலீட்டாளர்கள் விரும்பும் மற்றும் ஸ்மால்கேப் பிரிவை சேர்ந்த நிறுவனங்கள் என்பது கவனிக்கத்தக்கது.

25 நாளில் 2 மடங்கு லாபத்தை கொடுத்த 6 ஸ்மால்கேப் பங்குகள்.. முதலீட்டாளர்களின் பணத்தை டபுள்..!!

விஎல் இ கவர்னன்ஸ் அண்ட் ஐடி சொல்யூஷன்ஸ்: வக்ராங்கி சாப்ட்வேர் நிறுவனத்தின் துணை நிறுவனமான விஎல் இ கவர்னன்ஸ் அண்ட் ஐடி சொல்யூஷன்ஸ், இ கவர்னன்ஸ் மற்றும் ஐடி தீர்வுகளை வழங்கி வருகிறது. ஸ்மால்கேப் நிறுவனமான இந்நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் 6 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளது.

கடந்த ஜனவரி 5ம் தேதி வரையிலான 25 வர்த்தக தினங்களில் இப்பங்கின் விலை 144 சதவீதம் உயர்ந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.67.36ஆக இருந்தது. இந்நிறுவன பங்கின் விலை இந்நிறுவனம் தற்போது செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் பொறியியல் வணிகத்தில் வர்த்தக வாய்ப்புகளை ஆய்வு செய்து வருகிறது.

ஓரியண்டல் ரயில் இன்பராஸ்ட்ரக்சர்: ஓரியண்டல் ரயில் இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனம் இந்திய ரயில்வேக்கு இருக்கைகள் மற்றும் கழிவறை கதவுகள் போன்ற பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

கடந்த மாதம் இந்நிறுவனத்தின் நிதி திரட்டல் நடவடிக்கையின்போது, இந்நிறுவனத்தின் 34 லட்சம் பங்குகளை பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் முகுல் மகாவீர் அகர்வால் வாங்கியது குறிப்பிடத்தக்கது. கணக்கீடு காலத்தில் இந்நிறுவன பங்கின் விலை 140 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.263.50ஆக இருந்தது.

ஆர்ட்மெிஸ் எலக்ட்ரிக்கல்ஸ் அண்டு புராஜக்ட்ஸ்: ஆர்ட்டெமிஸ் எலக்ட்ரிக்கல்ஸ் அண்டு புராஜக்ட்ஸ் நிறுவனம் எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி லைட்டிங் பாகங்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஜனவரி 5ம் தேதி வரையிலான 25 வர்த்தக தினங்களில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 124 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.50.33ஆக இருந்தது.

ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ்: ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனம் காற்றாலை செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது. 2022 நவம்பரில் இந்நிறுவன பங்கு அதன் வெளியீட்டு விலையான ரூ.65ஐ விட 7 சதவீதம் குறைவாக ரூ.60.50 என்ற விலையில் பட்டியலிடப்பட்டது.

இருப்பினும் கடந்த 2023ம் ஆண்டில் இப்பங்கின் விலை 2 மடங்குக்கு மேல் உயர்ந்தது. கடந்த 25 வர்த்தக தினங்களில் (ஜனவரி 5 வரை) இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 110 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.133.70ஆக இருந்தது.

எஸ்ஸார் ஷிப்பிங்: 25 வர்த்தக தினங்களில் எஸ்ஸார் குழுமத்தை சேர்ந்த எஸ்ஸார் ஷிப்பிங் நிறுவன பங்கு இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.32.59ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.672 கோடிதான்.

பிசி ஜூவல்லர்: தொடர்ந்து கடந்த சில காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வரும் பிசி ஜூவல்லர் நிறுவன பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதற்கு மத்தியில் இப்பங்கின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.57.83ஆக இருந்தது.

கடந்த ஆண்டு எஸ்பிஐ மற்றும் பிற வங்கிகள் நிலுவை தொகையை (கடன் பாக்கி) வசூலிக்க இந்நிறுவனத்துக்கு எதிராக கார்ப்பரேட் திவால் தீர்மான நடவடிக்கைகளை தொடங்க மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+