ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ.45 கோடி பரிசு வென்ற கேரள இளைஞர்..!

குடும்ப சூழ்நிலை, வெளிநாடுகளில் வேலை பார்த்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணம் போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலைபார்த்து வருகிறார்கள். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நம் நாட்டவர்கள் அதிகம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி வர்த்தகம் பேமஸ். அங்கு லாட்டரி குலுக்கல்களில் அதிகம் பங்கேற்பவர்கள் நம்ம மக்கள்தான். என்னதான் கடினமாக வேலை பார்த்தாலும் அதிக பட்சம் சில லட்சங்களை சம்பாதிக்க முடியும். அதேசமயம் லாட்டரியில் பரிசு விழுந்தால் ஒரே இரவில் கோடீஸ்வரனாகி விடலாம் நம்ம கஷ்டங்களும் தீர்ந்து விடும் என்ற ஆசையில் லாட்டரி குலுக்கல்களில் பங்கேற்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ.45 கோடி பரிசு வென்ற கேரள இளைஞர்..!

இந்நிலையில், துபாயில் கடந்த புதன்கிழமையன்று நடந்த 154வது மஹ்சூஸ் லாட்டரி குலுக்கலில் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜூ என்பவர் ரூ.45 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். இதனையடுத்து அவர் ஒரே நாள் இரவில் கோடீஸ்வரனாகி விட்டார்.

அவர் துபாயில் இருந்து கிழக்கே 120 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஃபுஜைராவில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டராக பணியாற்றுகிறார். 39 வயதான ஸ்ரீஜூ கடந்த 11 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். அவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

பரிசு தொகை கிடைத்தது குறித்து ஸ்ரீஜூ கூறுகையில், நான் வெளியே செல்வதற்காக காரில் இருந்தபோது, லாட்டரியில் எனக்கு பரிசு விழுந்த செய்தி கிடைத்தது. உடனே நான் எனது மஹ்சூஸ் கணக்கை சரிபார்த்தபோது, என் கண்களால் நம்ப முடியவில்லை. பெரிய வெற்றி (பெரிய பரிசு தொகை) பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் விட்டேன்.

நான் வெற்றி பெற்றது உண்மை என்பதை உறுதி செய்வதற்காக லாட்டரி நிறுவனத்திடம் இருந்து அழைப்புக்காக காத்திருந்தேன். இந்த பரிசு பணத்தில் இந்தியாவில் எந்த கடனும் வாங்காமல் சொந்தமாக ஒரு வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

ஸ்ரீஜூ தவிர்த்து மேலும் சில இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி குலுக்கல்களில் பரிசு வென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற எமிரேட்ஸ் டிரா பாஸ்ட்5 குலுக்கலில், துபாயில் கொள்முதல் நிபுணராக பணியாற்றும் கேரளாவை சேர்ந்த சரத் சிவதாசன் பங்கேற்ற 2 மாதங்களில் சுமார் ரூ.11 லட்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அபுதாபியில் 16 ஆண்டுகளாக தங்கி வேலை பார்த்து வரும் மும்பையை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப வல்லுனரான பவ்சர் பாஸ்ட்5 குலுக்கலில் ரூ.15 லட்சம் வென்றுள்ளார். கடந்த 8ம் தேதியன்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற துபாய் டூட்டி ப்ரீ மில்லியன் புமோஷனில் இந்திய கப்பல் மேலாளரான அனில் கியான்சந்தனி சுமார் ரூ.8 கோடி வென்றுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+