மூலத்தில் கழிக்கப்பட்ட வரியை (டிடிஎஸ்) அரசிடம் டெபாசிட் செய்ய தவறிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நாடு தழுவிய அளவில் கடும் நடடிவக்கை எடுக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமே, தொடர்ந்து குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதும், வரி விலக்குகளில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகளை சரிசெய்வதும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டுகளில் செய்யப்பட்ட வரி விலக்குகளின் அடிப்படையில் சுமார் 40,000 வரி செலுத்துவோர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய நேரடி வரிகள் வாரியம், டிடிஎஸ் செலுத்த தவறிய கணக்குகளை அடையாளம் காண 16 அம்ச திட்டத்தை தயாரித்துள்ளது. இது தவிர்த்து, தரவு பகுப்பாய்வு குழு, ஆய்வுக்காக அத்தகைய வரி செலுத்துவோரின் முழுமையான பட்டியலை தயாரித்துள்ளது. பகுப்பாய்வு குழுவிடமிருந்து பெறப்பட்ட தரவு எங்களிடம் உள்ளது. வரி செலுத்த தவறியிருந்தால், அத்தகைய வரி செலுத்துவோரை முதலில் தகவல் மூலம் தொடர்பு கொள்வோம். தொடர்ந்து குற்றம் செய்யும் நபர்கள் மீது அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள்.

வரி விலக்கு மற்றும் முன் கூட்டியே வரி செலுத்துதலில் பெரிய வேறுபாடு மற்றும் வசூலிப்பவரின் பெயரில் அடிக்கடி மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் உள்ள வழக்குகளையும், நிறுவனங்கள் தங்களது தணிக்கையில் நலிவடைந்த அல்லது நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்களை பயன்படுத்திய வழக்குகளையும் அதிகாரிகள் விசாரிப்பார்கள். வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 40(a)(la)-ன் கீழ், அதிக அளவில் வரி விலக்கு அளிக்கப்படாத வழக்குகள் குறித்த அறிக்கையை அளிக்கும்படி மதிப்பீட்டு அதிகாரிகளை வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
கழிக்கப்பட வேண்டிய டிடிஎஸ் கழிக்கப்படாமலோ அல்லது அரசாங்கத்திடம் டெபாசிட் செய்யப்படாமலோ இருக்கும் சந்தர்ப்பங்களில் விலக்கு அளிக்க இந்த விதி அனுமதிக்காது. வரி அதிகாரிகள பலமுறை டிடிஎஸ் ரிட்டர்ன்கள் திருத்தப்பட்டு. இயல்புதொகையில் கணிசமான குறைப்பு ஏற்படும் நிகழ்வுகளையும் அதிகாரிகள் உன்னிப்பாக கவனிப்பார்கள். நேர்மையான வரி செலுத்துவோருக்கு டிடிஎஸ் இணக்கத்தை நாங்கள் தளர்த்தியிருந்தாலும், வரி முறையை நியாயமாகவும், சமமாகவும் மாற்ற வேண்டுமென்றே தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications