மும்பை: வருமான வரி விலக்கு கோருபவர்கள் வழக்கமாக ஹெச்ஆர்ஏ எனப்படும் ஹவுஸ் ரெண்ட் அலோவன்ஸுக்காக அதிக வரிச்சலுகை பெறும் பொருட்டு நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களின் பான் எண்ணை கொடுப்பது பெரிய ஆபத்தில் சென்று முடியும் என்பதற்கான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தற்போது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் போலியான பான் நம்பரை கொடுத்து பலர் அதிக அளவில் வாடகையை குறிப்பிட்டு வருமான வரி சலுகை கோரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பான் நம்பருக்கு ரூ.10 கோடிக்கு வீட்டு வாடகை செலுத்தப்பட்டதாக வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த பான் எண்ணில் அப்படி எந்த தொகையும் வரவு வைக்கப்படவில்லை என்றும் அவருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில் 8000 முதல் 10000 பேர் இதுபோல போலியான பான் நம்பர்களை கொடுத்து வருமான வரி விலக்கு கோரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே பான் நம்பரில் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை வாடகையாக செலுத்தப்பட்டிருப்பதாக ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை நடத்தியதில் அந்த பான் எண்கள் போலியாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஆய்வில் இதுபோல பல்வேறு நபர்கள் வருமானவரி விலக்கு வருமானவரி விலக்கு கோருவதற்காக இதுபோல போலியான பான் எண்களை வழங்கி மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோல போலி பான் எண்களை கொடுத்து மோசடியாக வருமான வரிச் சலுகை கோரியவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போல மோசடி செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளிடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
ஆனால் பான் எண்கள் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகின்றன குறிப்பாக அதன் உரிமையாளரின் அனுமதியில்லாமல், மோசடிக்கு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவங்கள் அமைந்துள்ளன என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது நிதி சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளும் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இதுபோல ஏமாற்றுபவர்களை எளிதாக கண்டறிந்திட முடியும் எனவே போலியான பான் எண்களை வழங்கி வீட்டு வாடகைக்காக வரி சலுகை கோருபவர்கள் பின்னாளில் நடவடிக்கை ஆளாகலாம் என வருமான வரி துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஹவுஸ் ரெண்ட் அளவன்ஸ் என்பது ஊழியர்களுக்கு ஒரு நிறுவனம் தரக்கூடிய ஊதியத்தில் ஒரு பகுதி ஆகும். இதில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வீட்டு வாடகையாக செலுத்தக்கூடிய தனிநபர்கள் அதற்கான ரசீதுகளை தாக்கல் செய்து வருமானவரி சலுகை கோரலாம்.
அப்போது வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை கொடுப்பது கட்டாயம். ஆனால் பலர் , அதிக வரிச்சலுகை கோருவதற்காக பான் எண்களை மோசடியாக வழங்கி வருகின்றனர்.
story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications