ஒரு தேசத்தின் வளர்ச்சியை அந்த தேசத்தில் இருக்கும் பெண்களின் வளர்ச்சி மற்றும் பெண்கள் நடத்தப்படும் விதத்தை கொண்டு மதிப்பிடலாம் என சொல்லப்படுவது. இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. இந்த 79 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?
பொருளாதார முன்னேற்றம்: தேசத்தின் விடுதலை போரில் பெண்களும் சமமாக பங்கேற்றுள்ளனர் என வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. 1947ஆம் ஆண்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றது. அப்போது இந்தியா என்ற நாடு பிறந்து படிப்படியாக வளர்ந்து உலக பொருளாதாரத்தில் முன்னணி நாடாக மாறி இருக்கிறது.

சுதந்திரத்தின் போது பெண்கள்: 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பெண்கள் பெரிய அளவில் படிப்பறிவு பெறவில்லை, பெண்கள் என்றாலே வீட்டில் தான் இருக்க வேண்டும், வீட்டு வேலைகள், விவசாய வேலைகளை பார்க்க வேண்டும் என்ற நிலை தான் இருந்தது. சொத்தில் சம பங்கு கிடையாது, சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படும், பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்.
என்ன மாற்றம் வந்துள்ளது: இந்த 79 ஆண்டுகளில் பெண்களின் இந்த நிலை பெரிய மாற்றம் கண்டிருக்கிறது. கிராமங்களில் தொடங்கி நகரங்கள் வரை பெண்கள் கல்வி கற்று வேலைக்கு செல்கின்றனர். குழந்தைகள் திருமணங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வழங்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூரை நடத்திய பெண்: தற்போது பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என கூறிவிடலாம் , பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரை தலைமை தாங்கி நடத்தியதே ஒரு பெண் தான் என்பது இந்தியாவில் பெண்களின் சமூக பங்களிப்பும், பொருளாதார பங்களிப்பும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நமக்கு காட்டும்.

கல்விக்கு முக்கியத்துவம்: கிராமப்புறங்களில் தொடங்கி எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு படிப்பறிவு வேண்டும் , படித்து முடித்தவர்கள் வேலை செய்ய வேண்டும் சொந்தமாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான குடும்பங்கள் மனதில் பரவி இருக்கிறது. கல்வியின் முக்கியத்துவம் ,பெண்களுக்கான நிதி சுதந்திரம் குறித்தும் தற்போது அனைவரும் பேசி வருகிறார்கள். இதுவே மிகப்பெரிய ஒரு மாற்றம் என கூறலாம்.
பெண் தொழிலாளர் பங்களிப்பு: இந்தியாவில் female labour participation அதாவது வேலையிடங்களில் பெண்களின் பங்களிப்பு 41% என உயர்வு கண்டுள்ளது. இதுவே பெண் கிராமப்புறங்களில் மட்டும் கணக்கீடு செய்தால் கிட்டதட்ட 48% பேர் பெண்களாக தான் இருக்கிறார்கள் . பெண்களுக்கான வேலை வாய்ப்பின்மை விகிதம் வெறும் மூன்று சதவீதமாக தான் இருக்கிறது.
ஸ்டார்ட் அப்பில் சாதிக்கும் பெண்கள்: மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்கும் ஸ்டார் அப் நிறுவனங்களில் பாதிக்கும் அதிகமான நிறுவனங்களில் பெண்கள் தான் இயக்குனர்களாக இருக்கிறார்கள் . அதாவது 73,151 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தலைமை ஏற்று நடத்துவது பெண்கள்தான். பெண்கள் தொழில்தொடங்க பிரத்தியேக கடன் உதவி, பெண்கள் திறன் மேம்பாட்டு திட்டங்கள் என மத்திய மாநில அரசுகள் எடுக்கும் முயற்சியும் சமூக விழிப்புணர்வும் இதற்கு காரணம்.
ஜிடிபியில் பெண்கள் பங்கு: கிராமப்புறங்களில் பெண்கள் வேளாண்மை , கட்டிட வேலை , வீட்டு வேலை என அமைப்பு சாரா துறைகளில் தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கிய வண்ணம் தான் இருக்கிறார்கள் . இந்தியாவின் ஜிடிபி யில் பெண்களின் பங்களிப்பு 17 சதவீதமாக இருக்கிறது. இது உலக சராசரியை விட குறைவு என்றாலும் நம் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது இது அதிகம்.
சட்டங்கள் என்னென்ன: வரதட்சணை தடுப்பு சட்டம் , குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்டம், சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகியவை நடைமுறையில் இருக்கின்றன.
பாலின சமத்துவம் கிடைத்துவிட்டதா?: பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். குடும்பங்களில் ஆண்களை போலவே பெண்கள் வேலைக்கு சென்று பங்களிப்பு செய்வதும் தொடர்கிறது. இருந்தாலும் பணியிடங்கள், சம்பளம் உள்ளிட்டவற்றில் இன்னும் சில இடங்களில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான பொறுப்புகளும் சம்பளமும் வழங்கப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பாலின சமத்துவத்தில் இன்னும் இந்தியா முன்னேற வேண்டி இருக்கிறது. இந்தியா தன்னுடைய 100ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்குள் அதனை எட்டி விடும் என நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications