சென்னை: பொருளாதார ஏற்ற இறக்க தன்மைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தங்கத்தை வாங்கி கையிருப்பாக வைத்துக் கொள்கின்றன உலக நாடுகள். அதிக தங்க கையிருப்பு வைத்திருப்பதும் ஒரு நாட்டின் பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதார பார்வையில் தங்கத்தின் இருப்பின் ஒரு நாட்டிற்கு அவசியம்.
அந்த வகையில் அண்மையில் கூட ரிசர்வ் வங்கி 102 டன்கள் தங்கத்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தது. தந்தேராஸ் எனப்படும் தீபாவளி பண்டிகை நாளில் தங்கம் வாங்கினால் அது பெருமளவில் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இந்தியாவில் இருக்கிறது. இந்த ஆண்டு தந்தேராஸுக்கு ரிசர்வ் வங்கி லண்டனில் உள்ள பேங்க் ஆப் இங்கிலாந்து வாலட்டிலிருந்து 102 டன் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவிடம் 855 டன்கள் தங்கம் கையிருப்பாக உள்ளது. இதில் 510 டன்கள் மதிப்பிலான தங்கம் இந்தியாவிற்குள்ளேயே சேமிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. மீதமுள்ள தங்கத்தை வெளிநாடுகளில் இந்தியா பாதுகாப்பாக வைத்துள்ளது. இருப்பினும் அவற்றை இந்தியாவிற்கே முழுமையாக கொண்டு வந்துவிட வேண்டும் என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே ரிசர்வ் வங்கி வெளிநாடுகளில் இருக்கும் தங்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தந்தேராஸை ஒட்டி 102 டன் தங்கத்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரகசியமான முறையில் இந்த பணி நடந்துள்ளது. தங்க கையிருப்பு என்பது ஒரு நாட்டின் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உலக அளவில் 8,133.46 டன்கள் தங்கத்துடன் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக ஜெர்மனி 3,351.53 டன்கள் தங்கத்தோடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது இத்தாலி. இந்த நாடு 2451.84 டன்கள் தங்கத்தை கையிருப்பாக வைத்துள்ளது. பிரான்ஸ் 2,436.97 டன்கள் தங்கத்தையும். ரஷ்யா 2335.85 டன்கள் தங்கத்தையும் கையிருப்பில் வைத்துள்ளன.
இந்த பட்டியலில் சீனா 2264.32 டன்கள் தங்கத்தோடு ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 855 டன்கள் தங்கத்தோடு எட்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் கையிருப்பில் 9 சதவீதம் தங்கமாக இருக்கிறது.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி மட்டும் தங்கத்தை வாங்கி கையிருப்பு வைப்பதில்லை. இந்திய குடும்பங்களே பெரும்பாலும் தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றன. ஏனெனில் இந்தியாவில் தங்கம் என்பது மக்களின் கலாச்சாரத்தோடு தொடர்புடையது.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை



Click it and Unblock the Notifications