ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

இந்தியாவில் உணவுப் பொருள் விநியோகத்தை எளிதாக்கும் நோக்கில், மத்திய அரசு முக்கிய நிர்வாக மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் இருந்து, ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அளிக்க வேண்டிய ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான மூன்று மாத உணவுத்தானியங்கள் ஒரே கட்டமாக வழங்கப்பட உள்ளன. இந்த விநியோகம் Public Distribution System (PDS) மூலம் நியாய விலை கடைகள் வழியாக மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம், பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும். ஒரே முறையில் மூன்று மாத அளவையும் பெற்றுக்கொள்ளும் வசதி கிடைப்பதால், குறிப்பாக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் சலுகையாக இருக்கும்.

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்..!!

அரசு அதிகாரிகள் இதுக்குறித்து தெரிவிக்கையில், இந்த நடைமுறை மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு நேரச் சேமிப்பு மற்றும் பயண சிரமம் குறையும். ரேஷன் அட்டை பயனாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் தானியங்களை பெற முடியும்.

இந்த bulk விநியோகம், வரவிருக்கும் கோதுமை கொள்முதல் காலத்துடன் இணைக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள பழைய இருப்புகளை முன்கூட்டியே வெளியேற்றி, புதிய பயிர் வரவுகளை சேமிக்க இடம் உருவாக்குவதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும்.

மாநில அரசுகள் ஏற்கனவே மத்திய கிடங்குகளில் இருந்து தானியங்களை முன்கூட்டியே எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. தற்போது, அதை தடையின்றி விநியோகம் நடைபெற உறுதி செய்ய வேண்டியுள்ளது.

PDS அமைப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ePOS கருவிகள் மற்றும் ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு மூலம், விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. இதனால் விநியோகம் எளிதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.

மேலும் அரசு அதிகாரிகள் கூறுவதாவது, தற்போது 99% பயனாளிகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற சரிபார்ப்பு நடவடிக்கைகளில், 41 லட்சத்திற்கும் மேற்பட்ட தகுதி இல்லாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தேவையில்லை பொருட்கள் திருட்டுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறை, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதி மற்றும் நேர சுமையை குறைக்கும். குறிப்பாக தினசரி வாழ்வாதாரத்திற்காக ரேஷன் தானியங்களை நம்பும் மக்களுக்கு இது ஒரு பெரிய ஆதரவாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+