இந்தியாவை சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர், ஒரே சமயத்தில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களை ஏமாற்றி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சோனம் பரேக் என்ற இளைஞர் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவர் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் மோசடி செய்தவர் என சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். முதலில் மிக்ஸ்பேனல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுஹைல் ஜோஷி வெளியிட்ட பதிவில் சோனம் பரேக் என்ற இந்திய பொறியாளரை நம்பாதீர்கள் அவர் ஒரு மோசடியாளர் என தெரிவித்துள்ளார்.

இவர் ஒரே சமயத்தில் 5 நிறுவனங்களில் வேலை செய்து பல்வேறு நிறுவனங்களை ஏமாற்றி வருகிறார் , அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என பதிவிட்டு இருக்கிறார். அண்மையில் பரேகை தன்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்ததாகவும், அவர் ஒரு மோசடியாளர் என தெரிந்து ஒரு வாரத்திலேயே வேலையில் இருந்து நீக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுபோல எந்த நிறுவனத்தையும் ஏமாற்றக்கூடாது என எச்சரித்தும் அவர் திருந்தவில்லை என கூறியுள்ளார்.
இவருடைய ரெஸ்யூமில் உள்ள 90% தகவல்கள் போலியானவை என தெரிவித்திருக்கும் அவர் , அந்த ரெஸ்யூமையும் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளும் இதே நபரை நாங்கள் பணி அமர்த்தி இருக்கிறோம் அவர் பல ஆண்டுகளாக இந்த இப்படி தான் மோசடி செய்து வருகிறார் என கூறியுள்ளனர்.
ஃப்ளீட் ஏஐ நிறுவன தலைமை செயல் அதிகாரி நிகோலாயும் இதே கருத்தினை வெளீயிட்டுள்ளார். இவர் ஒரே சமயத்தில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்தது தெரிய வந்து நாங்கள் வேலையில் இருந்து நீக்கினோம், இன்னும் இவர் இதனை தொடர்கிறாரா என வினவியுள்ளார்.
ஏண்டிமெடல், லிண்டி ஆகிய நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நபரை நாங்களும் வேலைக்கு அமர்த்தி இருக்கிறோம் ஸ்மார்ட்டாக வேலை செய்வார் ஆனால் இவர் மோசடியாளர் என தெரிந்து உடனடியாக பணி நீக்கம் செய்து விட்டோம் என பலரும் கூறியுள்ளனர். இப்படி அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்களில் இவர் வேலை செய்திருப்பது தெரிய வருகிறது.
சோனம் பரேக் ஒரே சமயத்தில் பல நிறுவனங்களில் வேலை செய்தாலும், வேலை செய்த நிறுவனங்களில் எல்லாம் இவருக்கு நல்ல பெயர் தான் இருந்துள்ளது. இவ்வாறு கடந்த ஆண்டில் மட்டும் 5 ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒரே சமயத்தில் வேலை செய்து ஒரு நாளைக்கு 2.5 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு 6 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்து இருக்கிறார் என ரெடிட் தளத்தில் வெளியாகி இருக்கும் ஒரு பதிவு குறிப்பிடுகிறது.
இவர் ஒரே சமயத்தில் பல நிறுவனங்களில் வேலை செய்தாலும் , அவுட் சோர்சிங் முறையில் வேலைகளை முடித்து தருவது, ஏஐ மூலம் பணிகளை மேற்கொள்வது , பல லேப்டாப்களை பயன்படுத்துவது என பல யுக்திகளை கையாண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications