வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தை 3 வார உயர்வை மொத்தமாக இந்த வார வர்த்தகத்தில் இழந்துள்ளது, இந்த மோசமான நிலைக்கு அடிப்படை காரணம் இந்தியா - கனடா மத்தியில் வெடித்த பிரச்சனை தான்.
இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை மூலம் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறி கடந்த ஒரு வாரத்தில் இந்திய பங்குச்சந்தை 3 வார உயர்வை இழந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1829.48 புள்ளிகள் அதாவது 2.69 சதவீதம் வரையில் சரிந்து 66,009.15 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதேபோல் நிஃப்டி தனது வரலாற்று உச்ச அளவான 20000 புள்ளிகள் என்ற முக்கிய அளவீட்டை இழந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வார வரத்தகத்தில் நிஃப்டி குறியீடு 518.1 புள்ளிகள் அதாவது 2.56 சதவீத பங்குகள் சரிந்து 19,674.25 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு செப்டம்பர் மாதம் மட்டுமே சுமார் 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
கடந்த வார சரிவுக்கு இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை முக்கியமான காரணமாக இருந்தாலும், இதுமட்டும் காரணமில்லை. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்த முடிவு, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, உலக நாடுகளில் பணவீக்கம் உயரும் அச்சம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் விற்பனையும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதற்கு மத்தியில் ஜேபி மோர்கன் தனது Government Bond Index குறியீட்டின் கீழ் இந்திய பத்திரங்களை சேர்த்துள்ளது, சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதில் உறுதுணையாக இருக்கும். இதேவேளையில் சில ஸ்மால் கேப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 37 சதவீதம் வரையில் உயர்ந்து லாபம் கொடுத்து முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
செப்டம்பர் 15 முதல் 22 வரையிலான காலக்கட்டத்தில் IFCI பங்குகள் 37.57 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் KIOCL 28.04 சதவீதமும், EKI எனர்ஜி சர்வீசஸ் 25.93 சதவீதமும், AGI கிரீன்பேக் 23.30 சதவீதமும், PNB GILTS 21.28 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதை தொடர்ந்து அதிக லாபம் பெற்ற பங்குகள் பட்டியல்...
ப்ரைம் ஃபோகஸ் - 20.65 சதவீதம்
HDFC - 17.71 சதவீதம்
Artemis medicare - 16.85 சதவீதம்
ராம்கோ சிஸ்டம்ஸ் - 15.59 சதவீதம்
KSB - 15.33 சதவீதம்
டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்ரேஷன் - 13.17 சதவீதம்
நெல்கேஸ்ட் -12.99 சதவீதம்
ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் - 12.98 சதவீதம்
ஹிந்துஸ்தான் புட்ஸ் - 12.88 சதவீதம்
சமன் லால் சேதியா எக்ஸ்போர்ட்ஸ் - 12.67 சதவீதம்
ப்ளூ ஸ்டார் - 12.64 சதவீதம்
பஜாஜ் ஹெல்த்கேர் - 12.36 சதவீதம்
லேன்சர் கண்டெய்னர்ஸ் லைன்ஸ் - 11.68 சதவீதம்
ஆனந்த் ரதி வெல்த் - 10.24 சதவீதம்
பிக்பிளாக் கன்ஸ்டிரக்ஷன் - 10.16 சதவீதம்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications