இந்தியாவே கொண்டாடும் ஜிஎஸ்டி வரி மாற்றம்.. ஆனா இவங்களுக்கு மட்டும் கண்ணீர்..!!

ஜிஎஸ்டி அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து இந்தியா முழுவதும் மகிழ்ச்சியில் உள்ளனர். பெரும்பாலான உணவு மற்றும் உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் மக்களின் இப்பிரிவு செலவுகள் மாதாந்திர அடிப்படையில் 10-15 சதவீதம் குறையும்.

இதேவேளையில் இந்தியாவில் அதிகம் விற்கப்படும் பொருட்களில் ஒன்றாக விளங்கும் புகையிலை, சிகரெட் போன்ற பொருட்கள் மீது தற்போதைய 28 சதவீத வரியில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இழப்பீடு வரியில் இருக்கும் கடன் மற்றும் பிற பிரச்சனைகளை சரி செய்யும் வரையில் இந்த புதிய வரி நடைமுறைப்படுத்தப்படாது.

இந்தியாவே கொண்டாடும் ஜிஎஸ்டி வரி மாற்றம்.. ஆனா இவங்களுக்கு மட்டும் கண்ணீர்..!!

இதோடு மற்றொரு முக்கிய மாற்றமும் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பில் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் பான் மசாலா, கட்கா, சிகரெட்கள், கையால் செய்யப்படாத புகையிலை மற்றும் சர்தா போன்ற பொருட்களுக்கு ரீடைல் விற்பனை விலை (RSP) அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை இந்த பொருட்கள் மீது பரிவர்த்தனை மதிப்பு (Transaction Value) அடிப்படையில் தான் கணக்கிட்டு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது. இந்த மாற்றம் மூலம் என்ன நடக்கும்..? புகை பிடிக்கும் மக்களுக்கு இதன் மூலம் என்ன பாதிப்பு ஏற்படும்? இரு முறை கணக்கீட்டிற்கும் என்ன வித்தியாசம்..?

ரீடைல் விற்பனை விலை மற்றும் பரிவர்த்தனை மதிப்பு:
ரீடைல் விற்பனை விலை (RSP) மற்றும் பரிவர்த்தனை மதிப்பு (Transaction Value) ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வித்தியாசம் என்னவெனில், ஜிஎஸ்டி கணக்கிடப்படும் அடிப்படை தொகை என்னவென்பதுதான்.

பரிவர்த்தனை மதிப்பு என்பது பொதுவாக பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி கணக்கிடப்படும் முறையாகும். இது டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் விற்பனையாளர் மத்தியிலான பரிமாற்ற விலையின் அடிப்படையில் ஜிஎஸ்டி கணக்கிடப்படும்.

மறுபுறம், ரீடைல் விற்பனை விலை (RSP) என்பது பொருட்களின் பேக்கேஜில் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலை (MRP) ஆகும், இதில் அனைத்து வரிகள், சரக்கு கட்டணம் மற்றும் விளம்பர செலவுகளும் அடங்கும். தற்போது புகையிலை பொருட்களுக்கு இந்த MRP விலை அடிப்படையில் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். இழப்பீடு செஸ் தொடர்பான பிரச்சனைக்கு பின்பு 40 சதவீதமாக கணக்கிடப்படும்.

புதிய முறையின் தாக்கம் மற்றும் நோக்கம்
புதிய ஜிஎஸ்டி மாற்றங்களின்படி, பான் மசாலா, கட்கா, சிகரெட்கள், கையால் செய்யப்படாத புகையிலை மற்றும் சர்தா போன்ற பொருட்களுக்கு இனி ரீடைல் விற்பனை விலையை அடிப்படையாக வைத்து வரி விதிக்கப்படும்

இந்த மாற்றம் வரி இணக்கத்தை மேம்படுத்தவும், உற்பத்தியாளர்கள் முன்பு தங்கள் வரி சுமையை குறைக்க பரிவர்த்தனை மதிப்பை குறைத்து அறிவித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்த காரணத்தால், இத்தகைய மோசடியை தடுக்க MRP மதிப்பில் கணக்கிடப்பட உள்ளது.

எளிமையாகச் சொன்னால், பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் வரி விதிக்கப்பட்டால், வாங்குபவர் உண்மையில் செலுத்தும் தொகையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். ஆனால், RSP அடிப்படையில் வரி விதிக்கப்பட்டால், பொருள் விற்பனையாளரால் உயர்ந்த விலையில் விற்கப்படும் அதிகபட்ச தொகையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும், உண்மையான விற்பனை விலை குறைவாக இருந்தாலும் கூட. இதனால் வரி மோசடி இருக்காது.

இந்த மாற்றம், பான் மசாலா மற்றும் சிகரெட் போன்ற பொருட்களின் விலையை அதிகரிக்கலாம், ஏனெனில் உற்பத்தியாளர்கள் MRP அடிப்படையாகக் கொண்டு வரி செலுத்த வேண்டியிருக்கும். இது நுகர்வோருக்கு சவாலை ஏற்படுத்தலாம், ஆனால் வரி ஏய்ப்பை குறைத்து, அரசுக்கு நியாயமான வருவாயை உறுதி செய்யும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+