வழக்கமாகவே இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும். இதனால் தான் இந்தியர்கள் துபாய்க்கு செல்லும்போது அதிகமாக விரும்பி வாங்கக்கூடிய பொருளாக தங்கம். இந்தியர்கள் பலரும் வேலைவாய்ப்பு, தொழில் ரீதியாகவும் துபாய்க்கு செல்லும் போது இந்தியாவை விட விலை குறைவாக இருப்பதால் தங்கத்தை வாங்கி வருவார்கள்.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 24 கேரட் தங்கம் ஒரு கிராமின் விலை 15,306 ரூபாய் இதுவே துபாயில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 14,520 ரூபாய். அதாவது ஒரு கிராமுக்கு 786 ரூபாய் விலை குறைவாக இருக்கிறது. அங்கே நகைகளுக்கான செய்கூலி சேதாரமும் குறைவு, எனவே துபாயில் தங்க நகை வாங்கும் போது இந்தியாவுடன் ஒப்பிட்டால் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் வரை சேமிக்க முடியும்.

ஆனால் துபாயில் தங்கம் வாங்கிக் கொண்டு இந்தியாவிற்கு கொண்டு வருவது அத்தனை எளிதான விஷயம் கிடையாது. அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. துபாயில் தங்கம் வாங்கியவர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போது பெண்களாக 40 கிராம் தங்கத்தை கொண்டு வரலாம் ஆனால் ரூபாய் மதிப்பில் அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாக தான் இருக்க வேண்டும். ஆண்கள் 20 கிராம் தங்க நகைகள் வரை கொண்டு வரலாம் ரூபாய் மதிப்பில் அது 50,000 ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும்.
இதற்கு அதிகமான மதிப்பு கொண்டிருந்தால் விமான நிலையத்திலேயே நாம் வரி செலுத்த வேண்டி இருக்கும். விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு நீங்கள் நகை வாங்கியதற்கான ஆவணங்கள் மற்றும் சுங்கத்துறை முறையாக முத்திரை இட்ட சான்றிதழ்கள் இருந்தால் தான் நீங்கள் தங்கத்தை இந்தியாவிற்குள்ளேயே கொண்டு வர முடியும். ஆனால் அண்மைக்காலமாக தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு சவரனே ஒரு லட்சம் ரூபாயை கடந்து விட்டது.
எனவே ரூபாய் மதிப்பு வரம்பில் பெண்கள் 8 கிராமும், ஆண்கள் 4 கிராமும் தங்கம் மட்டுமே கொண்டு வர முடிகிறது. இதனால் விமான நிலையங்களில் குழப்பம் ஏற்படுவதாக துபாய் வாழ் இந்தியர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை தான் கொண்டு வர வேண்டும் என்ற விதியை நீக்க கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசு துபாய் வாழ் இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று மிக முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. தி கஃல்ப் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி மத்திய அரசு custom baggage rule எனப்படும் விதிமுறைகளை மாற்றியமைத்து இருக்கிறது. இதில் பழைய மதிப்பீட்டு வரம்புகள் நீக்கப்பட்டுள்ளன. இனி தங்கத்தின் எடை அடிப்படையில் மட்டுமே வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்பு பெண்கள் 40 கிராம் வரை தங்கம் கொண்டு வரலாம், ஆனால் அதன் மதிப்பீட்டு வரம்பு ஒரு லட்சம் ரூபாய் வரை தான் இருக்க வேண்டும். ஆண்கள் 20 கிராம் வரை தங்கம் கொண்டு வரலாம். அதன் மதிப்பீட்டு வரம்பு 50,000 ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என இருந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் பெண்கள் இனி 40 கிராம் வரை தங்கம் கொண்டு வரலாம் அதன் ரூபாய் மதிப்பு எவ்வளவாக இருந்தாலும் அதை பற்றி கவனிக்க மாட்டார்கள்.
அதேபோல ஆண்கள் 20 கிராம் தங்கம் வரை கொண்டு வரலாம் அதன் ரூபாய் மதிப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை. அதாவது நீங்கள் துபாயில் தங்கம் வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு வருகை தருகிறீர்கள் எனும் போது இனிவரும் நாட்களில் நீங்கள் கொண்டுவரும் தங்கத்தின் எடை மட்டுமே கவனத்தில் கொண்டு வரி விதிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு எடுப்பார்கள். அதன் ரூபாய் மதிப்பு குறித்து கவலை கொள்ள மாட்டார்கள்.
நீண்ட காலமாக அரபு நாடுகளில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த நடவடிக்கை கொண்டு வந்திருக்கிறது. எனவே இனி எந்த குழப்பமும் இல்லாமல் பெண்கள் 40 கிராம் தங்கத்தையும் ஆண்கள் 20 கிராம் வரையிலான தங்கத்தையும் எந்தவித வரியும் இல்லாமல் இந்தியாவிற்கு கொண்டு வர முடியும். இது மிகப்பெரிய நிவாரணம் என அங்கே வசிக்கக்கூடிய இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய விதிமுறைகளால் விமான நிலையங்களில் குழப்பம் ஏற்படும் என்றும் தேவையற்ற பல இன்னல்களுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாவதாக தெரிவிக்கின்றனர். ஷார்ஜாவுக்கான இந்திய கூட்டமைப்பின் தலைவரான நிஷார் தலாங்கரா தி கல்ஃப் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார்.
விலை ஏற்ற இறக்கம் காரணமாக 1 லட்சம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் என்று வரம்பு அவுட்டேட்டாக இருந்தது. தற்போது அரசு கொண்டு வந்திருக்கும் இந்த அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது பல குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என கூறுகிறார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் அவர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications