உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத வரலாற்று உச்சபட்ச விலையை எட்டி இருக்கிறது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் சங்கத்தின் விலை 5 ஆயிரம் டாலர்களை கடந்துவிட்டது ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 100 டாலர்கள் என்ற மைல்கல்லை கடந்து வர்த்தகம் ஆகிறது.
சென்னையில் சொல்லவே வேண்டாம் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை தங்கம், வெள்ளி விலை என்பது உயர்கிறது. சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 15,610 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1, 24,880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலை இது. வெள்ளி ஒரு கிராம் 400 ரூபாய்க்கும் ஒரு கிலோ 4 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு சாமானிய மக்களான நமக்கு மட்டுமல்ல அரசுக்குமே கூடுதல் செலவை தான் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இந்தியா தனக்கு தேவையான பெரும்பாலான தங்கம் மற்றும் வெள்ளியை வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. உலக சந்தையில் தங்கம் வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது எனவே இந்தியா அதிகமான பணத்தை கொடுத்து தான் தங்கம் வெள்ளியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.
தங்கம் வெள்ளியை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம், அவ்வாறு செய்யும்போது அதற்கு நாம் இந்திய ரூபாயை கொடுக்க முடியாது அமெரிக்க டாலரை கொடுத்து தான் இந்த உலோகங்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. ஏற்கனவே தங்கம் வெள்ளியின் விலை உயர்ந்து விட்டது, மற்றொருபுறம் டாலரை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. எனவே இந்தியா வழக்கத்தை விட அதிகமான பணத்தை கொடுத்து தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
பொதுவாக ஒரு பொருளின் விலை உயர்கிறது எனும் போது மக்கள் அதை வாங்குவதை நிறுத்திவிடுவார்கள். ஆனால் தங்கம் வெள்ளி உலோகங்களில் மட்டும் இந்த விதி பொருந்தாது. விலை உயர உயர அதிகமான மக்கள் அதனை அதிகமாக போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள். நகை வாங்கும் போக்கு குறைந்திருந்தாலும் தங்க நாணயம், தங்க கட்டி மற்றும் கோல்ட் ஈடிஎஃப், சில்வர் ஈஎடிஎஃப் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து இருக்கின்றன.
அதிகமான தொகை செலவு செய்து தங்கத்தையும் வெள்ளியையும் வாங்குவது வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்திருக்கிறது. எனவே தங்கத்தின் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதியை குறைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை குறைப்பதற்கு அரசு இதற்கான இறக்குமதி வரியை உயர்த்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது கடந்த 2024 பட்ஜெட்டில் 15 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை அரசு 6 சதவீதமாக குறைத்தது. இப்போது தங்கம், வெள்ளி விலை உயர்ந்து, அதனை இறக்குமதி செய்ய அதிக செலவு செய்ய வேண்டியது வர்த்தக பற்றாக்குறையை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படுகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அரசு இறக்குமதி வரியை உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ரூபாய் மதிப்பை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை உயர்த்த வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். 2012 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ரூபாயின் மதிப்பு சரியக்கூடாது என்பதற்காக அரசு தங்கம் இறக்குமதிக்கான வரியை உயர்த்தியது அதேபோன்று ஒரு சூழல் தான் தற்போது நிலவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இறக்குமதி வரி உயர்த்தப்பட்டால் உள்நாட்டில் தங்கம், வெள்ளியின் விலை மேலும் பல மடங்கு உயரும்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications