உலகிலேயே 2வது பெரிய தங்க நுகர்வோர் சந்தையாக இருக்கும் இந்தியாவில் ஜூன் காலாண்டில் தங்கத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது. உலக நாடுகளில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசு முதலீட்டு நிறுவனங்கள் தான் தங்கத்தை முக்கிய பொருளாக பார்க்கிறது...
ஆனால் இந்தியாவில் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தை நகையாகவோ அல்லது காசுகளாக முதலீடு செய்யும் வழக்கத்தை கொண்டு இருக்கும் காரணத்தால் சீனாவுக்கு அடுத்தப்படியாக தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. வருடத்தின் 365 நாட்களும் தங்கத்திற்கான டிமாண்ட் இருக்கும் இந்தியாவில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு அதாவது தங்கத்தின் விற்பனை அளவு 7 சதவீதம் குறைந்து 158.1 டன் தங்கம் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜூன் காலாண்டில் நிலவிய அதிகப்படியான தங்கம் விலை. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர மிக முக்கியமான காரணம் சர்வதேச பொருளாதாரத்தில் இருந்த அதிகப்படியான தடுமாற்றாத்தில் அதிகளவிலான முதலீடு தங்கம் மீது உயர்ந்து அதன் விலை உயர துவங்கியது.
இந்திய நிலையில் இந்தியா தங்கத்திற்கு வெளிநாட்டு சந்தையின் இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால் இந்த விலை பாதிப்பு ரீடைல் விற்பனையை அதிகளவில் பாதித்துள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் தங்கத்தின் விற்பனை அளவு 7 சதவீதம் குறைந்தாலும், இறக்குமதி 16 சதவீதம் அதிகரித்து 209 டன்களாக உள்ளது என வோல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
வோல்டு கோல்டு கவுன்சில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் நுகர்வு முதல் அரையாண்டில் 271 டன்களாகாகவும், 2023 முழுவதிலும் 650 முதல் 750 டன் வரையில் இருக்கும் என கணித்துள்ளது. ஜூன் காலாண்டில் இந்தியாவின் தங்கத்தின் நுகர்வு 158.1 டன் இது ரூபாய் மதிப்பில் 82,530 கோடி ரூபாய், இதுவே கடந்த வருடம் 170.7 டன் மற்றும் 79,270 கோடி ரூபாய். எடை அளவில் கணக்கிட்டால் 7 சதவீதமும், ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 4 சதவீதமும் சரிந்துள்ளது.

இந்தியாவில் 18 கேரட் தங்க நகை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தங்கம் விலை உயர்ந்த காரணத்தாலும், தங்க நகை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் காரணத்தாலும் 18 கேரட் தங்க நகை விற்பனை இந்தியாவில் சூடுபிடித்துள்ளது.
இதேவேளையில் பார் மற்றும் தங்க நாணயங்களின் டிமாண்ட் வருடாந்திர அடிப்படையில் 30.4 டன்களில் இருந்து 29.5 டன்களாக குறைந்துள்ளது. மேலும் பழைய தங்க நகைகளை மாற்றுவோர் எண்ணிக்கையும் அளவீடும் அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 37.6 டன் தங்கம் recycling செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications