இந்தியர்களுக்கும் தங்கத்திற்கும் இடையிலான உறவு என்பது நகமும் சதையும் போன்றது. ஏனெனில் இந்தியர்கள் தங்கள் கையில் பணம் சேர்ந்தாலே முதலில் தங்க நகையாக தான் வாங்கி வைப்பார்கள். தங்கத்தை வாங்கி வைப்பது என்பது பல தலைமுறைகளாக இந்திய குடும்பங்களுக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு சேமிப்பு பழக்கம்.
இந்திய பெண்கள் மத்தியில் சிறுக சிறுக பணத்தை சீட்டு போட்டு தங்க நகையாக வாங்கி வைக்கும் போக்கு இருக்கிறது. தங்க நகை என்பது நம்முடைய அந்தஸ்தின் அடையாளமாக மட்டுமில்லாமல் ஒரு அவசர நிதி தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய ஒரு பொருளாகவும் இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த ஒரு சொத்தையும் நீங்கள் அரை மணி நேரத்திற்குள் பணமாக மாற்ற முடியாது. தங்கத்தில் மட்டுமே அது சாத்தியம்.

இதனால் தான் சாதாரணமான ஒரு குடும்பத்தில் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை நகையாக வாங்கி வைப்பார்கள். ஆனால் இந்த போக்கு தற்போது தலைகீழாக மாறி இருக்கிறது. ந்தியாவில் முதன்முறையாக தங்க நகைகளை தாண்டி பேப்பர் அடிப்படையிலான தங்க முதலீடுகளுக்கு டிமாண்ட் அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. உலகிலேயே தங்க நகை நுகரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஆனால் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்தியாவில் தங்க நகை தேவை குறைந்திருப்பதாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதாவது இந்தியாவில் முதன்முறையாக தங்கத்திற்கான டிமாண்டில் ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. வரலாற்றிலேயே முதல்முறையாக முதல் ஈடிஎஃப் போன்ற பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து நகையாக வாங்குவது குறைந்து இருக்கிறது என உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.

அதாவது இந்தியர்கள் தற்போது தங்கத்தை ஒரு நகையாக மட்டும் வாங்கி வைக்காமல் அதனை ஒரு முதலீடாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள் அந்த வகையில் தங்க நகையாக வாங்காமல் தங்கத்தில் ஈடிஎஃப் போன்ற வழிமுறைகளில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பதாக கூறுகறார் உலக தங்க கவுன்சிலுக்கான இந்திய பிரிவு தலைவர் சச்சின் ஜெயின்.
முதல் முறையாக முதலீடு தேவை தங்க நகை தேவையை மிஞ்சி இருக்கிறது என கூறுகிறார். வரும் காலாண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார். சில்லறை முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தை ஈடிஎஃப் உள்ளிட்ட வழிகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவது ஆச்சர்யம் தருவதாக கூறுகிறார்.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பல மடங்கு உயர்ந்தது ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்தது உள்ளிட்டவற்றால் ஏராளமான மக்கள் தற்போது தங்கத்தை நகையாக வாங்காமல் சிறுக சிறுக முதலீடு செய்து பேப்பர் முதலீடுகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். தங்க முதலீட்டின் மதிப்பு 82 மெட்ரிக் டன்களாகவும் நகையாக வாங்குவது 66 டன்களாகவும் இருப்பதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை கூறுகிறது.
பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு 52% அதிகரித்து தங்கத்தை நகையாக வாங்கும் போது 19 சதவீதம் குறைந்த இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்தாண்டு இறுதியில் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்தது . இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு பெரிய அளவிலான மாற்றம் காணப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை போது தங்கத்தை நகையாக வாங்கும் போது மக்களிடையே குறைந்து இருந்தது என்றும் சச்சின் ஜெயின் சுட்டிக் காட்டுகிறார்.


Click it and Unblock the Notifications

