அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற சிறிது நாட்களிலேயே டொனால்ட் டிரம்ப், சீனா,கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும் அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றுகையில், மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக நமக்கு எதிராக அதிக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது நமது முறை. அந்த மற்ற நாடுகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்த வேண்டும்.
ஐரோப்பிய யூனியன், சீனா,பிரேசில்,இந்தியா,மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட அதிகமாக வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. இந்தியா நம்மிடம் 100 சதவீதத்துக்கும் அதிகமாக வாகன வரியை வசூலிக்கிறது. ஏப்ரல் 2 முதல் இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுளின் பொருட்கள் மீது அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஏற்கனவே அமெரிக்க வரிகளை எதிர்கொண்டுள்ளன. அதேசமயம் இதுவரை டிரம்பின் வரி விதிப்பு இலக்கில் இருந்து இந்தியா தப்பித்தது. ஆனால் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து இந்தியா தப்ப முடியாது. ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற டிரம்பின் மிரட்டலால், இந்தியாவின் வாகனம் முதல் விவசாயம் வரையிலான ஏற்றுமதி துறைகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா நமது பொருட்களுக்கு விதிக்கும் வரியை விட நாம் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரி அதிகம்.
இந்தியா அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் அல்லது நாங்களும் அதே அளவுக்கு இந்திய பொருட்கள் மீது அதிக வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக நிற்கிறார். அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் நமக்கு தான் அதிக ஆதாயம் இருக்கு. உதாரணமாக இந்தியா தோரயமாக ஆண்டுக்கு சுமார் ரூ.6.75 லட்சம் கோடி மதிப்பிலான சரக்குகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக, கடல்சார் பொருட்கள், மருந்து சேர்மானங்கள்பருத்தி துணி போன்ற பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறோம்.
இந்திய ஏற்றுமதி:
கடல்சார் பொருட்கள் ரூ.21,628 கோடி
மின்சார இயந்திரங்கள் ரூ.22,459 கோடி
பருத்தி துணி ரூ.22,958 கோடி
இரும்பு மற்றும் அலுமினியம் ரூ.24,637 கோடி
ஆர்எம்ஜி காட்டன் ரூ.25,612 கோடி
தங்கம் & விலையுயர்ந்த உலோகங்கள் ரூ.29.431 கோடி
பெட்ரோலிய பொருட்கள் ரூ.36,497 கோடி
முத்து & விலையுயர்ந்த கற்கள் ரூ.47,819 கோடி
தொலைத்தொடர்பு கருவிகள் ரூ.61.783 கோடி
மருந்து சேர்மானங்கள் ரூ.73,497 கோடி
அதேசமயம், அமெரிக்காவிலிருந்து சுமார் ரூ.3.65 லட்சம் கோடி மதிப்பிலான சரக்குகளை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக உயர்ரக மதுபானங்கள், விலையுயர்ந்த வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவு்டனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ரூ.3.1 லட்சம் கோடி வர்த்தக உபரி (இறக்குமதியை காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருப்பது) உள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் நமக்கு பெரிய அளவில் ஆதாயம் உள்ளது. அதனால் அமெரிக்காவுக்கு பணிந்து செல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் உள்ளோம்.
இந்தியா அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்கவில்லை என்றால், அந்நாடு நமது ஏற்றுமதி பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும். இது நமது ஏற்றுமதியை பாதிக்கும். எனவே ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடுற மாட்டை பாடி கறக்கணும் என்பது போல் தற்சமயம் டிரம்பின் நடவடிக்கைக்கு இந்தியா கொஞ்சம் இசைந்துதான் போக வேண்டும். அதேசமயம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைத்தாலும் கூட பல இந்திய நுகர்வோருக்கு இன்னும் விலை உயர்ந்ததாகவே இருக்கக்கூடும்.
அமெரிக்க எஃப்எம்சிஜி அல்லது வாகன நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் குறைந்த தரம் வாய்ந்த தயாரிப்புகளாக இருக்கின்றன. அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் அவர்கள் அதை உள்நாட்டில் தயாரித்தவை ன்று சொல்கிறார்கள். ஆனால் அந்த பொருட்கள் எல்லாம் இரண்டாவது அல்லது மூன்றாவது தரமாக உள்ளது. அதேசமயம், மத்திய கிழக்கு அல்லது சிங்கப்பூரில் இதே பொருளை ஒருவர் வாங்கினால் அதன் தயாரிப்பு விலை அதிகம். ஆனால் தரம், சுவை மற்றும் உணர்வில் பெரிய வித்தியாசம் உள்ளது.
ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது தயாரிப்புகளை அவுட்சோர்ச்சிங் முறையில் வெளிநாடுகளில் தயாரித்து வாங்குகின்றன. அதேசமயம் அமெரிக்க அரசு அந்நாட்டில் உள்நாட்டுமயமாக்கல் அல்லது உள்நாட்டு உற்பத்தி பற்றி பேசுகிறது. நம் நாட்டிலிருந்தே பல லட்சம் கோடிக்குக்கு சரக்குகளை வாங்கும் அமெரிக்கா, அங்கு என்ன உற்பத்தியை தொடங்கும் என நாம் நம்புவது?.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவை தங்களது வர்த்தக சந்தையாகவே பார்க்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான கூட்டாளியாக அமெரிக்காவை பார்க்கிறது. இதன் மூலம் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதை குறைத்து கொள்ள முடியும். சீனா தனது அதிக மதிப்பிலான தயாரிப்புகளுக்கான ஒரு சிறந்த ஆடம்பர சந்தையாக அமெரிக்கா உள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை, இந்திய சரக்கு போக்குவரத்து நிறுவனங்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால் இந்தியாவிலிருந்து எஃப்ஓபி முறையில் பெரும்பாலான சரக்குகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் இந்திய சரக்குபோக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரிய பங்களிப்பு இல்லை. அடுத்து அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பும் 90 சதவீத பொருட்களை சிஐஎஃப் முறையில் ஏற்றுமதி செய்கிறது. இதுவும் இந்திய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. எனவே அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கையால் எந்தவொரு எதிர்மறையான நிகழ்வும் இந்திய சரக்கு போக்குவரத்து நிறுவனங்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதேசமயம் ஒவ்வொரு இந்திய சரக்கு ஃபார்வர்டரும் தங்கள் தற்போது கையாளும் அமெரிக்க வணிகத்தின் சதவீதத்தை மதிப்பிட முடியும். அதை மற்ற நாடுகளிலிருந்து பெற முடியுமா என்று மதிப்பீடு செய்யலாம்.
Story Written By: Subramanian
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications