தமிழ்நாடு மக்கள் எப்போதுமே கெத்து தான்!! தங்கம் விஷயத்திலும் இந்தியாவுக்கே முன்னோடி!!

தங்கத்துக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான பிணைப்பை ஒரு போதும் பிரிக்க முடியாது. நம் முன்னோர்கள் தொடங்கி பெற்றோர் வரை கையில் பணம் சேர்ந்தாலே அதற்கு தங்கம் வாங்கி வைத்து விடுவார்கள். நம் அம்மாக்கள் சிறுக சிறுக பணம் சேர்த்தும், சீட்டு போட்டும் தங்கம் வாங்கி வைத்து விடுவார்கள். இது சாதாரணமான விஷயமாக தோன்றினாலும் தற்போது இதுதான் உண்மையான சொத்தாக மாறி நிற்கிறது.

பாரம்பரியமாக தங்க நகைகள் ஒவ்வொரு தலைமுறைக்கும் கைமாறிக் கொண்டே இருக்கிறது. அப்படி பார்க்கும்போது இந்திய குடும்பங்கள் வசம் தான் பல கோடி மதிப்புள்ள தங்கம் குவிந்து கிடக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது இந்திய குடும்பங்கள் வசம் 36,000 டன்கள் தங்கம் இருக்கிறது. இது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கும் தங்கத்துக்கு நிகரானவை.

தமிழ்நாடு மக்கள் எப்போதுமே கெத்து தான்!! தங்கம் விஷயத்திலும் இந்தியாவுக்கே முன்னோடி!!

இந்திய குடும்பங்கள் வசம் பல கோடி மதிப்பிலான தங்கம் இருக்கிறது அதிலும் அதிக அளவிலான தங்கம், நம் தமிழ்நாட்டு குடும்பங்களிடம் இருக்கிறது என்பது தான் நமக்கு பெருமை. அதாவது இந்திய குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கங்களின் விகிதங்களை பார்க்கும் போது இந்தியாவிலேயே தமிழ்நாடு மக்களிடம் தான் அதிக அளவு தங்கம் கையிருப்பாக இருக்கிறதாம்.

நாட்டில் மொத்தம் உள்ள தங்கத்தில் 28.30 சதவீத தங்கம் தமிழ்நாட்டில் தான் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. Striking Gold: The Rise of India's Gold Loan Market என்ற ஆய்வறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு குடும்பங்களிடம் தான் அதிக தங்கம் இருக்கிறது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆந்திர பிரதேசம் இருக்கிறது. ஆந்திர பிரதேச குடும்பங்களிடம் 21.60% தங்கம் கையிருப்பு உள்ளது. இந்த பட்டியலில் தெலங்கானா 17.50 சதவீத தங்கத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இந்திய குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தில் 16.10 சதவீத தங்கம் கர்நாடக மாநில குடும்பங்கள் வசம் இருக்கிறது, 13.10 சதவீத தங்கம் கேரள மக்களிடமும் 13.7% தங்கம் குஜராத் மாநில மக்களிடமும் இருக்கிறது.

தமிழக குடும்பங்களிடம் தங்கம் நிதி ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் முக்கியமான ஒரு இணைப்பைக் கொண்டிருக்கிறது. திடீரென ஒரு கல்வி செலவு, மருத்துவ செலவு ஏற்படுகிறது எனும்போது மக்களுக்கு இந்த தங்கம் நிதி ரீதியாக பெரிய பாதுகாப்பை தருகிறது. அது தவிர பாரம்பரியமாகவே ஒரு குழந்தை பிறந்தது தொடங்கி காது குத்துவது, பெயர் சூட்டுவது, திருமணம் என அனைத்து நிகழ்வுகளிலுமே தங்க நகைகளுக்கு முக்கிய இடம் உள்ளது.

அந்த வகையில் ஒரு கலாச்சார ரீதியாகவும் தங்கம் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பாக பெண்கள் கையில் தங்கம் இருப்பது நீண்ட காலமாக ஊக்கவிக்கப்பட்டு வருகிறது இது வெறும் பாரம்பரிய மட்டுமல்ல மிக முக்கியமான ஒரு நிதி அதிகாரமளிக்கும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+