சுமார் 140 கோடி மக்களுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நம் நாட்டில் பெரிய தொழிலாளர் படை உள்ளது. ஆனால் வேலைவாய்ப்புதான் குறைவாக உள்ளது. வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், நம்மவர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தும் நோக்கில், வளர்ந்த நாடுகளுடன் வேலை ஒப்பந்தங்களுக்கு மத்திய அரசு தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இது இரு தரப்புக்கும் வெற்றியை அளிக்கும்.

இந்தியர்களை வேலைக்கு எடுக்கும் நாடுகள் தங்களது நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும். அதேசமயம் நம் நாட்டிலும் வேலையின்மை விகிதம் குறையும், வெளிநாட்டு பணம் அனுப்பும் திறனும் அதிகரிக்கும்.
தற்போது வரை இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 13 நாடுகளுடன் இது போன்ற ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு பதிலாக இந்திய தொழிலாளர்களை பணியமர்த்த விரும்புவதாக அண்மையில் இஸ்ரேல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தைவானுக்கு 1,00,000 பேரை வேலைக்கு அனுப்புவற்கான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் தைவான் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் கொண்ட சமூகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது அந்நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். அதனை உறுதி செய்வது போல் அந்நாட்டில் வேலையின்மை விகிதம் அடிமட்ட அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் நிலவும் தொழிலாளர் இடைவெளியை (பற்றாக்குறை) நிரப்ப இந்தியா விரும்புகிறது.
அதேசமயம் தைவானும் இந்திய தொழிலாளர்களுக்கு உள்ளூர் மக்களுக்கு இணையான ஊதியம் மற்றும் காப்பீடு சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய தொழிலாளர்கள் உடல்நலம் தொடர்பான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த மாதம் இரு நாடுகளும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சியும், இந்தியா-தைவான் வேலை ஒப்பந்தம் பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியா 1,00,000 பேரை தைவானுக்கு வேலைக்கு அனுப்பும். அங்கு மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
அதேவேளையில், தைவானை தங்களது ஒரு பகுதி என்று கூறிவரும் சீனாவுக்கு இந்தியாவின் இந்த நடவடிக்கை எரிச்சலை கிளப்பும். இருப்பினும், தைவான்-இந்தியா வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தவொரு விதத்திலும் ஒரே சீனா கொள்கையை மீறவில்லை என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications