போதை பொருட்களை விட மோசமானது.. ஓவர் நைட்டில் ரூ.27438 கோடி சந்தையை முடக்கியது மோடி அரசு..!!

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் துறையை ஒழுங்குபடுத்துவதற்கும், ஆன்லைன் கேமிங்களை விளையாடும் மக்களை பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கேமிங் ப்ரோமோஷன் மற்றும் ரெகுலேஷன் மசோதா 2025, லோக்சபாவில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் ஆரவாரத்திற்கு மத்தியில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. நேற்று இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இந்த மசோதா தற்போது லோக்சபாவில் ஒப்புதல் பெற்று நாட்டின் கேமிங் துறையில் பெரும் மாற்றத்தை செய்ய உள்ளது.

இந்த புதிய சட்டம் எதற்காக..? யாருக்கு அதிக பாதிப்பு..? இந்த மசோதா மூலம் அடுத்தடுத்து என்ன நடக்கும்..?

போதை பொருட்களை விட மோசமானது.. ஓவர் நைட்டில் ரூ.27438 கோடி சந்தையை முடக்கியது மோடி அரசு..!!

பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களுக்கு தடை:
இந்த மசோதா மூலம் பணத்தை பந்தயம் வைத்து விளையாடப்படும் அனைத்து வகையான ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்கிறது. இதில் பேன்டசி கேம்கள், போக்கர் மற்றும் ரம்மி போன்ற கேம்கள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகள் உட்பட பணத்தை வைத்து விளையாடும் அனைத்து கேம்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பணத்தை பந்தயம் வைத்து விளையாடப்படும் அனைத்து கேம்கள் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடைவித்தக்கப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பான நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பேமெண்ட் பிராசசிங் சேவைகளை அளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எதற்காக இந்த தடை?:
மனி கேம் எனப்படும் இந்த விளையாட்டுகள் இளைஞர்களை அடிமையாக்கி வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பொருளாதார இழப்புகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்த வகையான ஆன்லைன் பண விளையாட்டுகளால் ஏற்படும் பண இழப்புகள் மனநல பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளது.

போதை பொருட்களை விட மோசமானது.. ஓவர் நைட்டில் ரூ.27438 கோடி சந்தையை முடக்கியது மோடி அரசு..!!

மத்திய அமைச்சர் விளக்கம்:
இந்த மசோதா குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஈடி நவ்-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஆன்லைன் பண விளையாட்டுகள் போதைப்பொருளை விட பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவித்தார். இந்த விளையாட்டுகளில் மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்து பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார். இந்த விளையாட்டுகள் மிடில் கிளாஸ் குடும்பங்களை கடுமையாக பாதிக்கின்றன எனவும் தெரிவித்தார்.

இந்த மனி கேம்களில் மக்கள் ஆரம்பத்தில் சிறிய தொகைகளை வென்று விடுகின்றனர், இதன் பின்னர் ஆசை அதிகமாகி தங்கள் முழு சேமிப்பையும் இழக்கும் வகையில் இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இதுப்போன்ற கேம்களில் பயன்படுத்தப்படும் நிபந்தனைகள் எவ்வித கட்டுப்பாடும் உள்ளது. மேலும் மக்கள் ஒரு முறை தங்கள் கிரெடிட் கார்டு அல்லது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதி அளித்தவுடன், தொடர்ந்து பணம் எடுக்கப்படும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

போதை பொருட்களை விட மோசமானது.. ஓவர் நைட்டில் ரூ.27438 கோடி சந்தையை முடக்கியது மோடி அரசு..!!

3 கேமிங் பிரிவு:
இந்த மசோதா மூன்று முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது என்று அமைச்சர் வைஷ்ணவ் விளக்கினார். இ-ஸ்போர்ட்ஸ், ஆன்லைன் சோஷியல் கேம்கள், ஆன்லைன் மனி கேமிங் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் மசோதா மூலம் முதல் இரண்டு பிரிவுகளுக்கும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை, ஆனால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும்.

இதனால் இவ்விரு துறை தொடர்ந்து வளர்ச்சி அடையும், இதேபோல் வேலைவாய்ப்பு, வர்த்தகம், வருவாய் வளர்ச்சியில் எவ்விதமான பாதிப்பும் இல்லை.

தற்போது பிரச்சனை அனைத்தும் ஆன்லைன் மனி கேமிங் பிரிவில் தான். இத்தகைய கேம்கள் எப்படி இயங்குகிறது, இதன் அல்காரிதம் எப்படி இயங்குகிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு உள்ளது என்பது தான் தற்போதையை பிரச்சனை. இப்படியிருக்கும் சூழ்நிலையில் இத்தகைய கேம்களை விளையாடும் மக்கள் பணத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த கேம்கள் மக்களை அடிமையாக்கும் அளவுக்கு இருக்கும் காரணத்தால் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்து விளையாடுவது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் சில லட்சத்தில் துவங்கி கோடிகளில் கடன் வாங்கி விளையாடி சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளனர். இந்த கடனை தீர்க்க முடியாத காரணத்தால் பல தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.

இதோடு ஆன்லைன் மனி கேமிங் மூலம் பெறப்படும் பணம் முறைகேடாக வெளிநாடுகளுக்கு செல்வதும் அதிகமாகி வருகிறது. இதை ஒரு பண சலவை செய்யும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது, இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு தான் மத்திய அரசு ஆன்லைன் கேமிங் ப்ரோமோஷன் மற்றும் ரெகுலேஷன் மசோதா 2025 மூலம் மொத்தமாக தடை செய்துள்ளது.

இந்தியாவின் ஆன்லைன் மனி கேமிங் துறையின் மதிப்பு 27438 கோடி ரூபாயாக உள்ளது. இந்த மசோதா மூலம் டிரீம் 11, எம்பிஎல், கேம்ர்ஸ் 24X7, வின்சோ, ஜூபி, பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள Nazara Technologies பங்குகள் வாங்கிய கிளாசிக் ரம்மி, போக்கர் பாசி போன்ற ஆப்-கள் பாதிக்கப்படும்.

மசோதாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்:
ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கிடையில், ஆன்லைன் கேமிங் துறையின் முக்கிய தலைவர்கள், முழுமையான தடையை விதிப்பதற்கு பதிலாக, மற்ற கேமிங் பிரிவை போல சமமான ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, அவர்கள் மத்திய உள்துறை அமைச்சருடன் சந்திப்பு நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+