தற்போது பண்டிகை மற்றும் திருமண சீசன் என்பதால் அனைவரும் ஷாப்பிங் செய்ய ஆர்வமாக இருப்பர். பொதுவாக ஷாப்பிங் செய்ய விரும்பும் நகரங்கள் பட்டியலில் டெல்லி எப்போதும் முதலிடத்தில் இருக்கும். அங்கு லஜ்பத் நகர் அல்லது சரோஜினி மார்க்கெட், ஜன்பத் அல்லது கன்னாட் பிளேஸ், கான் மார்க்கெட் அல்லது நேரு பிளேஸ் என அனைத்து மார்க்கெட்டுகளுக்கும் சொந்த குணாதிசயங்கள், விலை வரம்பு உள்ளது.
ஆனாலும் அனைத்து சந்தைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். நம் நாட்டிலேயே சரோஜினி மார்க்கெட்டில் தான் குறைந்த விலையில் ஷாப்பிங் செய்யலாம் என்று, பல நகரங்களில் ஷாப்பிங் செய்தவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.

அதேசமயம் நம் நாட்டில் விலையுயர்ந்த மார்க்கெட் எது என்று உங்களுக்கு தெரியுமா? அதுவும் டெல்லியில் தான் உள்ளது. ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் & வேக்ஃபீல்டின் ஆய்வின்படி, வாடகை அடிப்படையில், டெல்லியின் கான் மார்க்கெட் தான் நாட்டிலேயே விலையுயர்ந்த சில்லரை சந்தையாக மாறியுள்ளது.
ஸ்ட்ரீட் மார்கெட் சர்வதேச பட்டியலில் 22வது இடத்தை கான் மார்க்கெட் பிடித்துள்ளது. இந்த மார்க்கெட்டில் வாடகை ஆண்டுக்கு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது கான் மார்க்கெட்டில் மாத வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ.1,506ஆக உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் டாப் 51 விலையுயர்ந்த பிரதான தெரு சந்தைகளில் 16 இந்திய முக்கிய வீதிகள் சந்தைகள் இடம்பெற்றுள்ளன.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் டாப் 3 விலையுயர்ந்த மார்க்கெட்டுகள்
1.நியுயார்க்கின் 5வது அவென்யூ
2.மிலனின் வையா மான்டெனாபோலியான்
3.ஹாங்காங்கின் சிம் ஷா சூயி
இந்தியாவின் டாப் 5 விலையுயர்ந்த மார்க்கெட்டுகள்
1.கான் மார்க்கெட் (22வது இடம்)
2.கன்னாட் பிளேஸ் (30வது இடம்)
3.குர்கிராமின் கேலரியா சந்தை (31வது இடம்)
4.மும்பையின் லிங்க்கிங் ரோடு (33வது இடம்)
5.கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் (37வது இடம்)
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நியாயமான விலையுள்ள சந்தைகளில் சென்னை இடம் பிடித்துள்ளது. சென்னையின் அண்ணாநகர் 2வது அவென்யூ மற்றும் பாண்டி பஜாரில் வாடகை ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு முறையே ரூ.152.7 மற்றும் ரூ.166.6 மட்டுமே உயர்ந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் வாடகையில் 40 சதவீதம் அதிகரிப்பை கண்டுள்ளபோதிலும் இது மிகவும் மலிவு சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications