தங்கத்த வாங்கி லாக்கர்ல பூட்டி வைக்கிறதுல என்ன லாபம்? - Zerodha நிறுவனர் நிதின் காமத் கேள்வி!!

உலகிலேயே அதிக அளவு தங்கம் நுகர்வு கொண்ட நாடாக சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா இடம் பிடித்திருக்கிறது . இந்தியாவைப் பொறுத்தவரை சாதாரண குடும்பத்தை குடும்பத்தில் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை வாங்கி வைப்பதை ஒரு அந்தஸ்தாகவே பார்க்கிறோம். அது மட்டும் இன்றி பாரம்பரியமாகவும் தலைமுறை தலைமுறையாகவும் பல டன்கள் கணக்கிலான தங்கம் இந்திய குடும்பங்கள் வசம் கை மாறிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்திய பெண்களுக்கும் தங்கத்திற்கும் இடையே இருக்கக்கூடிய பிணைப்பை அத்தனை எளிதாக யாராலும் நீக்கிவிட முடியாது. இந்திய குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு கிட்டதட்ட 3 ட்ரில்லியன் டாலர்கள் என சொல்லப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி இருக்கும் ஜெரோதா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிதின் காமத் இந்திய குடும்பங்கள் வசம் 3 ட்ரில்லியன் மதிப்பிலான தங்கம் லாக்கரில் சும்மாவே வைக்கப்பட்டிருக்கிறது , அதே வேளையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களோ மூலதனம் இல்லாமல் தவித்து வருகின்றன என கூறுகிறார்.

தங்கத்த வாங்கி லாக்கர்ல பூட்டி வைக்கிறதுல என்ன லாபம்? -  Zerodha நிறுவனர் நிதின் காமத் கேள்வி!!

வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டு இருக்கும் தங்கத்தை நாட்டின் வளர்ச்சிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நிதி அளிக்க கூடிய வகையில் மாற்றுவதற்கான ஒரு சிறந்த வழிமுறையை கண்டறிய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். நாட்டை முன்னேற்றுவதற்கு இந்த தங்கத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் .

இதற்கு ஏதுவாக ஒரு சார்ட்டையும் அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்திலேயே பகிர்ந்து இருக்கிறார். அதில் தங்கம் மற்றும் நிப்டி குறியீடு ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு இருக்கிறார் . 1996 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான இந்த 30 ஆண்டுகளில் தங்கம் நல்ல லாபம் தந்திருக்கிறதா அல்லது ஈக்விட்டி சந்தை அதாவது பங்குச் சந்தைகள் நல்ல லாபம் தந்து இருக்கிறதா என அதில் ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

அப்படி பார்க்கும்போது 30 ஆண்டுகளில் 24 ஆண்டுகளில் தங்கத்தை விட ஈக்விட்டி தான் சிறந்த லாபம் தந்து இருக்கிறது என கூறியிருக்கிறார். எனவே நீண்ட கால வளர்ச்சிக்கு எப்பொழுதுமே தங்கத்தை காட்டிலும் ஈக்விட்டி சந்தை சிறப்பாக செயல்படுகிறது என்பதையே இந்த வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன என கூறுகிறார் .

தங்கத்த வாங்கி லாக்கர்ல பூட்டி வைக்கிறதுல என்ன லாபம்? -  Zerodha நிறுவனர் நிதின் காமத் கேள்வி!!

2003, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நிஃப்டி 50 சராசரியாக 100 சதவீத லாபத்தை தந்திருக்கிறது .2008, 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் நிஃப்டி சரிந்துள்ளது. அதேவேளையில் தங்கம் என பார்க்கும் போது நீண்ட கால அடிப்படையில் ஒரு நிலையான வருமானத்தை தந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 32 சதவீத லாபம் தந்திருக்கிறது 2020 ஆம் ஆண்டில் 27 சதவீதமாகவும் 2025 ஏற்கனவே 50 சதவீதம் என்ற அளவை எட்டி இருக்கிறது .

இந்திய குடும்பங்கள் வசம் சுமார் 25 ஆயிரம் டன்கள் தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது . உலக தங்க கையிருப்பில் இது 14% . இவை அனைத்தும் இந்திய குடும்பங்கள் வசம் நகைகளாகவும் தங்க நாணயங்களாகவும் வீடுகளிலும் வங்கி லாக்கர்களிலும் அப்படியே வைக்கப்பட்டிருக்கின்றன. இது ஏதேனும் நாட்டின் வளர்ச்சிக்கு அல்லது முதலீட்டுக்கோ உதவுகிறது என்றால் நிச்சயம் கிடையாது . இதன் மதிப்பு சுமார் 2.4 மில்லியன் டாலர்கள் அதாவது இந்தியாவின் ஜிடிபி -இல் இது பாதி அளவு கொண்டது.

அண்மையில் கூட ஹெச்எஸ்பிசி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா, ஜெர்மனி ,சீனா , ரஷ்யா உள்ளிட்ட உலகின் முன்னணி 10 நாடுகளின் மத்திய வங்கிகள் கைவசம் இருக்கும் தங்கத்தை விட இந்திய குடும்பங்கள் அதிக தங்கம் வைத்திருப்பதாக கூறி இருக்கிறது .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+