இந்தியா, 2024 ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைந்தது மூலம் தங்கம் விலை இந்திய ரீடைல் சந்தையில் பெரிய அளவில் குறைந்தது. இதனால் மக்கள் அதிகளவில் தங்கம் வாங்கினர். இதன் பின்னர் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் தங்கம் கூடுதலாக சரிந்தது.
இவ்விரு காரணத்தால் மக்கள் அதிகளவில் தங்கம் வாங்கியது மூலம் 2024ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய தங்கம் நுகரும் நாடாக மாறியுள்ளது.

சமீபத்தில் வெளியான தரவுகள் படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க நகை நுகர்வு 563.4 டன்னாக அதிகரித்துள்ளது. இது சீனாவின் தங்க நகை நுகர்வு 511.4 டன் அளவை விட அதிகம் என்பதால் சீனா ஓரம்கட்டப்பட்டு இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் மொத்த தங்கம் நுகர்வு 2023 ஆம் ஆண்டின் 761 டன்-லிருந்து 2024 ஆம் ஆண்டில் 802.8 டன் ஆக 5% அதிகரித்துள்ளது, இதில் மொத்த தங்க நுகர்வில் தங்க கட்டிகள், காயின்கள், தங்க நகைகள் என அனைத்தும் அடங்கும். 2024 ஆம் ஆண்டில் தங்கம் விலை குறைந்தது மூலம் தங்கத்தை மக்கள் பல்வேறு வகையில் வாங்கியுள்ளதும், மக்களின் முக்கிய முதலீடாக மாறியதும் தெரிய வந்துள்ளது.
இதேபோல் 2024 ஆம் ஆண்டில் தங்கத்தை முதலீட்டுக்காக மட்டுமே 240 டன் அளவுக்கான தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது, இது முந்தைய ஆண்டின் 185 டன் அளவிலிருந்து பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் புவியியல் அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்றவற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தங்கம் முக்கிய பாதுகாப்பு அம்சமாக கருதப்படுவதால் தங்கத்தில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மொத்தமாக தங்க விலை 28% உயர்ந்தது, இந்த விலை உயர்வு போக்கு 2025 ஆம் ஆண்டிலும் தொடர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் விலை ஏற்கனவே 11% அதிகரித்துள்ளது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications