கடந்த மாதம் 22ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் 100 தீவிரவாதிகள் பலியாகினர்.
எல்லையில் அத்துமீறல்
இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் நேற்று இரவு ஜம்மு எல்லை பகுதியில் அத்துமீறி பாகிஸ்தானின் விமான படை விமானங்கள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய விமான படை, பாகிஸ்தான் விமான படையின் எஃப்-16 ரக போர் சுட்டு வீழ்த்தியது. மேலும், பாகிஸ்தான் விமான படையின் எஃ.ப்-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டி வீழ்த்தியது.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம், புவிசார் அரசியல் பதட்டங்களை தீவிரப்படுத்தியது மட்டுமல்லாமல், பொருளாதார உறுதியற்ற தன்மையையும் தூண்டியுள்ளது. இதன் தாக்கம் இரு நாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது. கராச்சி பங்குச் சந்தை சரிந்தது. இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கமாக உள்ளது. போர் குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், வர்த்தகம், சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து போன்ற முக்கிய துறைகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி துறை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது. இதனை தொடர்ந்து முக்கியமான வர்த்தக பாதையான அட்டாரி-வாகா பார்டர் தற்போது மூடப்பட்டுள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்த பாதையில் சுமார் ரூ.3,887 கோடி மதிப்பிலான சரக்குகள் பயணமாகி இருந்தது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் அங்கு மருந்து தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கப்பல்களை இந்திய துறைமுகங்களில் நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் வர்த்தகம் இன்னும் கடுமையானதாக மாறி விட்டது. இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் சர்வதேச வர்த்தகத்தையும் பாதித்துள்ளது.
அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் நிலையற்றதன்மை காரணமாக சர்வதேச வாங்குபவர்கள் இந்த பகுதியில் வர்த்தகம் செய்ய தயங்கலாம். பாகிஸ்தானிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதித்தது, நமக்கும் சிறிய பாதிப்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. சில மருந்துகள், ரசாயனங்கள், சர்க்கரை மற்றும் வாகன உதிரிபாகங்கள் அங்கு இறக்குமதி செய்வது தடைப்படும்.
சுற்றுலா துறை
அண்மையில் நடந்த பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, காஷ்மீரில் சுற்றுலா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஒரு சில நாட்களுக்கு ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2024ல் காஷ்மீருக்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இருந்தனர். ஆனால் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை கடுமையாக குறைந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்டட நாடுகள் தங்களது நாட்டு குடிமக்கள் காஷ்மீருக்கு தற்சமயம் செல்ல வேண்டாம் என்று சுற்றுலா எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுதவிர மத்திய அரசும் மக்களிடம் அவசியமான பயணங்களை மட்டுமே மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனால் காஷ்மீரில் உள்ள ஹாட்டல்கள், ரிசார்ட்ஸ் மற்றும் சுற்றுலா வணிகம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல மக்கள் தங்களது வருவாய்க்கு சுற்றுலா நம்பித்தான் உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் மோதலால் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை தவிர்க்க வைத்திருக்கிறது.
விமான போக்குவரத்து துறை
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும், தங்களது வான்வெளியை ஒருவருக்கொருவர் விமானங்களுக்கு மூடி விட்டன. இந்தியா ஒரு படி மேலே போய், வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 27 நிலையங்களை மூடி விட்டது, இதனால் 430 விமானங்கள் ரத்தானது. வான்வெளியை மூடியதால் பல நூற்றுக்கணக்கான விமானங்கள் மாற்றுபாதையில் செல்ல தொடங்கி விட்டன. இதனால் விமான எரிபொருள் செலவினம் அதிகரிப்பு மற்றும் பயணம் நேரம் அதிகரிப்பு ஆகிய எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் ஐரோப்பா, வட அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான விமானங்கள் இப்போது மாற்றுப்பாதையில் செல்கின்றன. எரிபொருள் செலவினம் அதிகரித்துள்ளதால் விமான டிக்கெட் விலை அதிகரித்து வருகிறது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற நமது நாட்டை விமான நிறுவனங்களும், உலகளாவிய விமான நிறுவனங்களும் செயல்பாட்டு தலைவலி மற்றும் நிதி இழப்புகளை எதிர்கொள்கின்றன.
சில விமானங்கள் தாமதமாகின்றன அல்லது முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பயணிகள் மற்றும் விமான வருவாய் பாதிக்கப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வு பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications