இந்திய மக்களுக்கு எப்போதும் நிரந்தர சொத்தாக இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி சமீப காலமாக முக்கியமான நிதி திரட்டும் கருவியாக மாறியுள்ளது. ஆம் தங்கம், வெள்ளி விலை உயர்வால் ஒருப்பக்கம் மக்கள் தொடர்ந்து வாங்கி வந்தாலும், மறுபுறம் இதை அடமானமாக வைத்து கடன் வாங்குவதும், கையில் இருக்கும் பழைய தங்கத்தை விற்பனை செய்து நிதி திரட்டுவது அதிகரித்துள்ளது.
பொதுவாக பழைய தங்கம் தான் அதிகளவில் சந்தையில் விற்கப்படும். ஆனால் தற்போது டிரெண்ட் மாறி வெள்ளியும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்ததால், ஒரே வாரத்தில் சுமார் 100 டன் பழைய வெள்ளியை மக்கள் விற்றுவிட்டனர் என்று இந்தியா புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஒரு மாதத்தில் 10 முதல் 15 டன் அளவிலான பழைய வெள்ளி மட்டுமே சந்தையில் விற்பனைக்காக வரும். ஆனால் இந்த வாரத்தில் மட்டும் பத்து மடங்கு அதிகரித்து 100 டன் வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரீடைல் சந்தையில் புதன்கிழமை வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,78,684 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. வியாழக்கிழமை சற்று குறைந்து ரூ.1,75,730 ஆனாலும், சமீபத்தில் பதிவான குறைந்தபட்ச வெள்ளி விலையை ஒப்பிடுகையில் இப்போதும் 20 சதவீதம் அதிகமாகவே உள்ளது. இந்த விலை உயர்வு தான் மக்களை வீட்டில் இருந்த பழைய வெள்ளியை விற்கத் தூண்டியுள்ளது.
இதுக்குறித்து இந்தியா புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், பழைய வெள்ளி விற்பனை அதிகரிக்க 3 முக்கிய காரணம் உள்ளது என்று விளக்குகிறார். 1. வெள்ளி விலை உயர்ந்ததால் லாபம் பார்க்கும் எண்ணத்துடன் விற்கப்படுகிறது. 2. திருமண சீசன் காரணமாக நகை வாங்கவும், வெள்ளி பொருட்களை வாங்குவும் விற்கப்படுகிறது. 3. வருடத்தின் இறுதியில் விடுமுறையை கொண்டாடவும், பயணச் செலவுக்காகவும் பணம் தேவையை பூர்த்தி செய்ய பழைய வெள்ளி விற்பனைக்கு வருகிறது என கூறுகிறார்.
தற்போது விற்பனைக்கு வரும் வெள்ளி பெரும்பாலானவை வீட்டில் பயன்படுத்தப்பட்ட பழைய பாத்திரங்கள், நகைகள், சிலை போன்ற ஸ்கிராப் வெள்ளிப் பொருட்களாகும்.
வெள்ளி விலை விரைவில் கிலோவுக்கு ரூ.2 லட்சத்தைக் கூட தாண்டும் என்று சந்தை நிபுணர்கள் கணிக்கும் இத்தகைய சூழ்நிலையில் மக்கள் வெள்ளியை விற்கின்றனர். இந்தியாவில் திருமண சீசன், பண்டிகை காலம் என்பதால் வெள்ளி நகைக்கு தேவையும் அதிகரிக்கும்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?



Click it and Unblock the Notifications