அமெரிக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவ்வப்போது குறிப்பிட்ட ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதி மீது கூடுதல் வரி விதிப்பது வாடிக்கையான ஒன்று. அதுவும் குறிப்பிட்ட காலம்தான் அமலில் இருக்கும். இதனால் இதுவரை இப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதியன்று மீண்டும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி மீதான பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றம் செய்தது.
ஆப்பிள்
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால், அந்நாட்டுக்கான இந்தியா ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அமெரிக்காவின் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதிக்கு வரி விதித்தற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், பாதாம் உள்பட 29 பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதி மீது 25 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையால், அந்நாட்டுக்கான 760 கோடி டாலர் மதிப்புள்ள இறக்குமதியை பாதிக்கும்.
29 பொருட்கள்
மேலும் இந்த வரி மூலம் அமெரிக்கா 200 கோடி டாலர் வசூலிக்கும். எனவே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், பாதாம் மற்றும் போரிக் ஆசிட் உள்பட மொத்தம் 29 பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்போகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஜூலை மாத இறுதிக்குள் இருதரப்பு (இந்தியா-அமெரிக்கா) வர்ததக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியாவும் அமெரிக்காவும் விரைந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக, இந்தியா அந்நாட்டு பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாரம் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக இந்திய குழு அமெரிக்காவுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
பரஸ்பர வரி
கடந்த மார்ச் 12ம் தேதி முதல் அதனை கால நிர்ணயம் இன்றி அமெரிக்கா நடைமுறைப்படுத்தியது. இதன்படி, அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.
அவசர அவசரமாக கணக்கை முடித்த முதலீட்டாளர்கள் ... கலக்கத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்தார். இதனால் அந்நாட்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்தது. இருப்பினும் அண்மையில் சீனாவை தவிர இந்தியா உள்பட பிற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
தற்போது அமெரிக்காவின் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதி வரி விதிப்புக்கு பதிலடியாக, 29 அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்தியாவின் பதிலடிக்கு டிரம்ப் எதிர்வினை ஆற்றுவார் என்ற சந்தேகமும் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications