இந்தியா போல பெரிய நாட்டு மக்கள் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை நகைகளாகவும், முதலீட்டாகவும் அதிகமாக வாங்குகிறார்கள். இதனால் தான் இந்த உலோகங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகவும், தவறான வழிகளிலும் இறக்குமதி செய்கிறார்கள். இதைத் தடுக்க மத்திய அரசு புதிய கடுமையான விதிகளை 2025 மே 19-ஆம் தேதி அறிவித்துள்ளது.
தங்க இறக்குமதியில் வரும் மாற்றம்: முன்பு எளிதாக இறக்குமதி செய்யக்கூடிய "unwrought" மற்றும் "semi-manufactured" வகை தங்கங்கள், இப்போது "Restricted" என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதன் பொருள், இவை இறக்குமதிக்கு முன் அரசு அனுமதி பெற வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. புதிய விதிமுறைகளின் படி, தங்கம் இறக்குமதி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அல்லது DGFT வழியாக நியமிக்கப்பட்ட நிறுவனங்களே அனுமதிக்கப்படுகின்றன

மேலும், IFSCA (International Financial Services Centres Authority) அங்கீகரித்த நகை வியாபாரிகள் மட்டும் இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் (IIBX) மூலம் தங்கம் இறக்குமதி செய்யலாம். India-UAE CEPA உடன்படிக்கையின் கீழ் TRQ (Tariff Rate Quota) உரிமை பெற்றவர்கள் IIBX வழியாக தங்கம் இறக்குமதி செய்யலாம். ஆனால் அவை IFSCA-அங்கீகரிக்கப்பட்ட "vaults" (பாதுகாப்பான சேமிப்பு இடங்கள்) மூலமாகவே இறக்குமதி செய்யப்பட வேண்டும். தங்கத்தின் "dore" (அரைவழியாக சுத்தப்படுத்தப்பட்ட தங்கம்) இறக்குமதி, உரிய அனுமதியுடன் செயல்படும் ரீஃபைனரிகள் (refineries) வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். பழைய HS குறியீடுகள் (உலோகங்களுக்கான அடையாள எண்கள்) 71081200 மற்றும் 71081300 ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
வெள்ளி இறக்குமதியில் என்ன மாற்றம்?: புதிய கொள்கையின் கீழ், வெள்ளி பட்டைகள் (silver bars) மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்பு 99.9% சுத்தம் கொண்ட வெள்ளியை எளிதாக இறக்குமதி செய்ய முடிந்த நிலையில், தற்போது அதுவும் "Restricted" வகையில் சேர்க்கப்பட்டுள்ளது (HS Code 71069120).
இப்போதைய விதிகளின்படி, வெள்ளியை இறக்குமதி செய்யக்கூடியவர்கள் யார் என்றால், RBI அறிவித்த வங்கிகள், DGFT நியமித்த நிறுவனங்கள், மற்றும் IIBX வழியாக IFSCA அங்கீகரித்த நகை வியாபாரிகள் மட்டுமே ஆகும். இவை தவிர, வெள்ளி பட்டைகளின் "semi-manufactured" வகை பொருட்கள் முந்தைய போன்று எளிதாக இறக்குமதி செய்யப்படலாம், ஆனால் அவை RBI விதிகளுக்குள் செயல்பட வேண்டும். இந்த மாற்றம், தவறான சலுகைகள் மூலம் சட்டவிரோத வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்தவும், முறையாக கண்காணிக்கக் கூடிய வகையில் இறக்குமதி நடைமுறையை மாற்றவும் செய்யப்பட்டுள்ளது.
பிளாட்டினம் இறக்குமதியில் மாற்றம்?: 99% சுத்தம் கொண்ட பிளாட்டினம் முறையாகவும் எளிதாகவும் இறக்குமதி செய்ய முடியும். ஆனால் மற்ற வகை பிளாட்டினம் - எடுத்துக்காட்டாக தூள், துண்டுகள், பாதி தயாரிக்கப்பட்டவை போன்றவை இப்போது கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை இறக்குமதி செய்ய அரசு முன்னறிவிப்பு அனுமதி பெற வேண்டும். பழைய பிளாட்டினம் HS குறியீடுகள் 71101110 மற்றும் 71101910 ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. அனைத்து விலைமிகு உலோகங்களும் India International Bullion Exchange (IIBX) என்ற அதிகாரப்பூர்வ சந்தை வழியாக வருவதால் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் எளிதாக இருக்கும். HS குறியீடுகளை புதுப்பித்து, தவறான பயன்பாடுகள் தடுக்கப்படுகின்றன.
இந்த புதிய அரசின் கட்டுப்பாடுகள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களை பாதுகாப்பாகவும், சட்டபூர்வமாகவும் இறக்குமதி செய்ய வைக்கும் நல்ல முயற்சி. இதில் யாரும் தவறாக இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது. பொதுமக்கள், நகைக்கடைகள், முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்த விதிகளை தெரிந்துகொண்டு அதன்படி செயல்பட வேண்டும். இது நமது நாட்டின் வர்த்தக நம்பிக்கைத் தன்மையையும், பாதுகாப்பையும் வளர்க்கும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications