2024-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் அதிக அளவிலான இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்பு நடந்த மோசடி சம்பவங்களை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் மக்கள் 20 மில்லியன் டாலர் வரை இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கிறது. இது இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ. 1,74,50,31,676. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதால் அது தொடர்புடைய அபாயங்களும் அதிகரித்து வருகிறது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. 1 மணி நேரத்திற்கு 11 ரூபாய் என்ற குறைந்த விலையில் கிடைக்கும் டேட்டா பேக்குகளால் இணைய வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பேடிஎம், போன்பே மற்றும் கூகுள்பே போன்ற நிறுவனங்கள் ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்ட பேமென்ட் சந்தையையே உருவாக்கியுள்ளன.

ஆனால் மக்களிடையே சைபர் மோசடி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால்.. அதிக அளவில் மோசடிக்கு ஆளாகி தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை இழந்து வருகின்றனர். மோசடி செய்பவர்கள் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆன்லைனில் மெசேஜ் அனுப்புவது, போன் செய்து மிரட்டுவது, லிங்குகளை அனுப்பி அதன் மூலம் சுய விவரங்களை திருடுவது என எண்ணற்ற யுக்திகளை அதற்காகப் பயன்படுத்துகின்றனர்.
நிதி அமைச்சகம் திங்களன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின் படி 2024-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் மோசடியால் மக்கள் இழந்த மொத்த தொகை 1.77 பில்லியன் ஆகும். இது 2023-ஆம் நிதியாண்டை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகம் என்று சொல்லலாம்.
அதிலும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்து மக்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.. கடந்த 2023-ஆம் ஆண்டில் ரூ. 6,699-ஆக இருந்த நிலையில்.. 2024 ஆம் ஆண்டில் 29,082-ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே சைபர் குற்றங்களை ஒழிக்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.. ஸ்பேன் கால்களை பிளாக் லிஸ்ட் செய்வது, மோசடி தொடர்பான எச்சரிக்கையை அழைப்பு விடுக்கும் போது தெரிவிப்பது என அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் இன்னும் சிலருக்கு மோசடி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் லட்சக்கணக்கில் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.
ஒரு புறம் மக்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க மோசடி செய்ய பயன்படுத்தப்படும் யுக்திகளையும் புதிதாக உருவாக்கி வருகின்றனர். சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்களை அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. இதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடர்ந்து வழங்கி வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதில் சில வங்கிகள் எச்சரிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களை வைத்து விளம்பரப்படுத்தி வருகிறது. 2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் தனது மாதாந்திர வானொலி உரையின் போது நரேந்திர மோடி டிஜிட்டல் மோசடிகள் பரவுவது குறித்து பேசியிருந்தார். மேலும் மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications